முந்தைய 'தி வெர்ஜ்' கடைத் தொகுதி இருந்த இடத்தில் 'தேக்கா பிளேஸ்' என்ற பத்து மாடி பிரதானக் கட்டடமும் அதன் அருகில் கூரைத் தளம் கொண்ட ஏழு மாடி இணைப்புக் கட்டடமும் கட்டப்படவிருக்கின்றன. சிராங்கூன் சாலையில் அமைய விருக்கும் இந்த ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் பற்றிய தக வல்கள் நேற்று முன்தினம் அறி விக்கப்பட்டன. இப்புது கட்டடத்தில் கலை, கலாசாரம் ஆகியவற்றுக்கு முக் கியத்துவம் அளிக்கப்படுவதுடன் கண்காட்சிகள், கலைப்படைப்புகள், நிகழ்ச்சிகள் என்பவைக்கும் இடங் கள் ஒதுக்கப்படும்.
திட்டத்தின் மேம்பாட்டாளர்கள் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் மற்றும் இந்திய மரபுடைமை நிலை யம், லாசால் கலைக் கல்லூரி போன்ற சமூக பங்குதாரரை ஈடுபடுத்தி வருகின்றனர். இனி வருகை அளிப்போர் லிட்டில் இந்தியா வழங்கக்கூடிய மரபு, பண்பாட்டின் வளமையை அனுபவிக்கும் அதே சமயத்தில் பொருள் வாங்கும்போதும் உண வருந்தும்போதும் தரமான அனுபவ மாக அமையவேண்டும் என்பதும் குறிக்கோள். கட்டடத்தின் மேல் மாடிகளில் 320 வீடுகளும் ஓய்விடம், உடற் பயிற்சிக் கூடம், சலவையிடம், நீச்சல் குளம் போன்ற வசதிகளும் அமையவிருக்கின்றன. 70,000 சதுர அடி அளவுக்கு கடைகள் அமைக்க இடமும் ஐந்து மாடிகளுக்கு வாகனம் நிறுத்தும் இடமும் அமையும்.
லிட்டில் இந்தியாவில் புதிய 'தேக்கா பிளேஸ்' கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு பிற்பகுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம்: LUM CHANG, LASALLE INVESTMENT MANAGEMENT