கழிவறையைப் பயன்படுத்தும்போது பாலர் பள்ளி மாணவர்கள் நல்ல பழக்கவழக் கங்களைக் கடைப்பிடிப்பது குறித்து ஒரு புது கையேடு நேற்று சிங்கப்பூர் கழிவறைச் சங்கத்தால் வெளியிடப்பட்டது. கைகளை ஒழுங்காகக் கழுவுவது, கழிவறைகளைச் சுத்தம் செய்வோருக்கு நன்றி தெரிவிப்பது, கழிவறைகளுக்குத் தரப்படும் வெவ்வேறு பெயர்களை அறிவது என பல தகவல்களை உள்ளடக்கிய இக்கையேட்டில் நல்ல கழிவறைப் பழக்க வழக்கங்கள் தொடர்பான விளையாட்டு கள், நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கும். சங்கம் தன் 20ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிட்ட இந்தக் கையேட்டு டன் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் பயன்படக்கூடிய வழிகாட்டிப் புத்தகம் ஒன்றும் பல்வேறு வளங்களை உள்ளடக்கி இணைக்கப்பட்டது.
2015இல் பாலர் பள்ளிகளுக்கு எனத் தொடங்கப்பட்ட 'ஹேப்பி டாய்லட்ஸ்' எனும் திட்டத்தின்கீழ் 100க்கும் மேற்பட்ட பாலர் பள்ளிகள் பங்கேற்றுப் பலனடைந் துள்ளன. இந்நிகழ்வில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, கல்வி அமைச்சுக் கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் இணை பேராசிரியர் முகமது ஃபைஷல் இப்ராஹிம் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டார்.
செர்ரி ஹாட்ஸ்@சார்ல்ட்டன் பாலர் பள்ளி மாணவர்களுடன் சிங்கப்பூர் கழிவறைச் சங்கத்தின் தலைவி திருவாட்டி டான் புவெய் (வலது), சிறப்பு விருந்தினர் டாக்டர் முகமது ஃபைஷல் இப்ராஹிம் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்