தொழில்நுட்பத்துடன் கலைகள் இணைவது குறித்து அமைச்சர் ஹெங் சுவீ கியட்

சிங்கப்பூரின் வளர்ச்சிக்குக் கடந்த 53 ஆண்டுகளாகப் பொறி யியல், தொழில்நுட்பம், கணிதம் போன்ற துறைகள் முக்கிய பங்கு அளித்து வந்துள்ளபோதிலும் கலைகள் மற்றும் மனிதவியலின் முக்கியத்துவமும் அதிகரித்து வருவதாக நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நேற்று தெரிவித்தார். "தொழில்நுட்பத்துடன் கலை கள் இணையும்போது சிறந்த யோசனைகள் மலரும். பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது நல்ல தரமான யோசனைகள் கிடைக்கும்," என்றார் திரு ஹெங். 'ஆல் பாசிபல் பாத்ஸ்; ரிச்சர்ட் ஃபேன்மன்ஸ் கியூரியற் லைஃப்' எனும் தலைப்பில் கலைகள் அறிவியல் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஹெங், கலைகளும் கலாசாரமும் நாட்டின் முக்கியமான அம்சம் என்று விவரித்தார்.

அவை மக்களுக்கு ஊக்கு விப்பாக இருப்பதாகவும் சமூ கத்தை வடிவமைக்க உதவுவதாக வும் அவர் தெரிவித்தார். "கலைகள், சமூக அறிவியல், மனிதவியல் ஆகியவற்றின் முக்கியத்துவம் தற்போது அடை யாளம் காணப்படுகிறது,"என்றார் அமைச்சர். எளிதில் புரிந்துகொள்ள முடியாத அறிவியல் குறிப்புகளை எளிமையான படக்காட்சிகளைக் கொண்டு மற்றவர்களுக்குப் புரிய வைத்த நோபெல் பரிசு வென்ற ரிச்சர்ட் ஃபேன்மனின் பணிகளை அமைச்சர் ஹெங் சுட்டினார்.

லெகோ இருவழித் தொடர்பு சாதனத்தைப் பயன்படுத்திப் பார்க்கும் அமைச்சர் ஹெங் சுவீ கியட் (நடுவில்). கண்காட்சியில் லெகோ பிளாக்ஸைப் பயன்படுத்தி அணுக்களையும் தனிமங்களையும் உருவாக்க கற்றுத் தரப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!