விட்டுக்கொடுத்து வர்த்தகப் போருக்கு முடிவு கட்டுக

அமெரிக்காவும் சீனாவும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு தங் களுக்கு இடைப்பட்ட வர்த்தகப் போருக்குத் தீர்வுகாணவேண்டி இருக்கிறது என்பதை உணர வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் அர்ஜென்டினாவில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை கூட்டம் நடத்தவிருக்கிறார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையில் சரியான திசையில் பேச்சுவார்த் தைகள் இடம்பெறுமா என்பது அந்தக் கூட்டத்தில் தெரிந்துவிடும் என்று திரு லீ குறிப்பிட்டார். "இரு நாடுகளுக்கும் இடைப் பட்ட பேச்சுவார்த்தைகள் ஆக்ககர மான இலக்கில் இருக்கும் என் பதே நம்பிக்கை. "இல்லை என்றால் ஏற்படக் கூடிய இழப்பு அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மட்டுமல்லாமல் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் இந்த வட்டாரம் மற்றும் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் கணிசமான அளவுக்கு இருக் கும்," என்று திரு லீ எச்சரித்தார். பாபுவா நியூ கினி நாட்டில் கூடிய ஏபெக் எனப்படும் ஆசியப் பசிபிக் அமைப்பைச் சேர்ந்த 21 நாடுகளின் தலைவர்களும் நேற்று கூட்டறிக்கையை வெளியிட முடியாமல் தோல்வி அடைந்துவிட்ட னர்.

வர்த்தகம் தொடர்பில் அவர் களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கி இருந் ததே அதற்குக் காரணம். ஏபெக் உச்ச நிலை மாநாட்டில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப் பதற்றங் களே அதிக இடம்பிடித்தன. சீனா தன் வழியை மாற்றிக் கொண்டால் ஒழிய அமெரிக்கா தீர்வைகளை அகற்றாது என்று அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் குறிப்பிட்டார்.

உலக வர்த்தக நிறுவனத்தைச் சீரமைக்கவேண்டும் என்ற அம்ச- மும் கூட்டறிக்கையில்இடம்பெறவேண்டும் என்று அமெரிக்கா நெருக்கியதும் பிரச் சினைக்கு காரணமாக இருந்த தாகவும் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா, சீனாவுக்கு இடையில் ஏற்பட்டு இருக்கும் வர்த்தகப் பிரச்சினையை இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட அடிப்படை முரண்பாடு என்ற நோக்கத்தில் பார்த்தால் அதற் குத் தீர்வு காண்பது சிரமமாகவே இருக்கும்.

ஆனால் குறிப்பிட்ட, நடை முறை ரீதியான வர்த்தகப் பிரச் சினைகளாக அவற்றைப் பார்த் தால் அந்தப் பிரச்சினைகளுக்கு இரு நாடுகளும் தீர்வுகண்டு விடமுடியும் என்று பிரதமர் திரு லீ கருத்துரைத்தார்.

பிரதமர் லீ சியன் லூங் பாபுவா நியூகினியில், கிராண்ட் பாபுவா ஹோட்டலில் செய்தியாளர்களிடம் பலவற்றையும் விளக்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!