கோரிக்கைகளை நிறைவேற்ற ஓர் அறிவிப்புத் தளம்

நீ சூன் சவுத் வட்டாரத்தின் குடியிருப்பாளர்களுக்கு வீட்டுப் பொருட்கள், துணைப்பாடச் சேவைகள், வேலை வாய்ப்புகள் போன்ற பற்பல தேவைகள் ஏற்படும் போது இனி அதே வட்டாரத்தில் இருக்கும் மற்ற குடியிருப்பாளர்கள் உதவியுடன் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். 'புரோஜெக்ட் கிவ் அன் டேக்' எனப்படும் இப்புதிய திட்டம் நேற்று நீ சூன் சவுத் சமூக மன்றத்தின் வருடாந்தர நிகழ்ச்சியின்போது தொடங்கிவைக்கப்பட்டது. குடியிருப்பாளர்கள் தாங்கள் அளிக்க விரும்பும் சேவைகள் அல்லது பொருட்கள் பற்றி சமூக மன்றத்தில் அமைந்துள்ள ஒரு பொது அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கலாம். இதற்கான படிவங்களைச் சமூக மன்றத்தில் பெற்றுக்கொண்டு நிறைவு செய்து பலகையில் ஒட்ட வேண்டும்.

தேவைகள் உள்ள குடியிருப் பாளர்கள் அதேபோல் தங்களின் கோரிக்கைகளைக் குறிப்பிடும் படி வங்களைச் சமூக மன்றத்தில் சமர்ப்பிப்பார்கள். இதன் பிறகு சமூக மன்றத் தினர், குடியிருப்பாளர்களிட மிருந்து பெறப்பட்ட வளங்களையும் கோரிக்கைகளையும் பொருத்திப் பார்த்துக் கோரிக்கைகள் நிறை வேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திடுவர். குடியிருப்பாளர்களின் இல்லங் களுக்குச் சென்றபோதும் அவர் களிடமிருந்து மின்னஞ்சல்கள் பெற்றபோதும் குடியிருப்பாளர்கள் தாங்கள் அளிக்க விரும்பும் பொருட்கள், சேவைகள் குறித்துக் கருத்து கூறினர் என்றும் இவ்வாறு குடியிருப்பாளர்கள் ஒருவருக் கொருவர் உதவ இந்த அறிவிப்புப் பலகை ஒரு நிரந்தரத் தளமாக அமையும் என்றும் நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லீ பீ வா கூறினார். "செய்யும் உதவி பெரியதோ சிறியதோ, எல்லா வகை உதவி களையும் நாங்கள் வரவேற்கிறோம். இது, குடியிருப்பாளர்கள் மற்றவர் கள் மீது கொண்டுள்ள அன்பையும் பரிவையும் காட்ட உதவும்," என் றார் திருவாட்டி லீ.

(இடமிருந்து) நீ சூன் சவுத் சமூக மன்றத்தில் நடைபெற்ற வருடாந்தர நிகழ்வில் கலந்துகொண்ட குழுத்தொகுதியின் அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகர் டாக்டர் லீ பீ வாவுடன் அவ்வட்டார குடியிருப்பாளர்கள் திருமதி ஸ்ரீநிதா கோபாலகிருஷ்ணன், திரு கோபாலகிருஷ்ணன், அவர்களின் மகன் யுகா கோபாலகிருஷ்ணன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!