சேமிப்பு முறிகளில் பணம் போடும் வரம்பு இரண்டு மடங்காக அதிகரிப்பு

சிங்கப்பூர் நாணய ஆணையம், தனிப்பட்டவர்கள் எஸ்பிபி எனப்படும் சிங்கப்பூர் சேமிப்பு முறிகளில் (Singapore Savings Bonds) பணம் போடுவதற்கான வரம்பை இரு மடங்காக உயர்த்துகிறது. முதலீட்டாளர்கள் தங்களுடைய ஓய்வுகால உறுதுணைத் திட்ட நிதியைப் பயன்படுத்தி இந்த முறிகளை வாங்கவும் அனுமதிக்கப்படுவார்கள். தனிப்பட்ட ஒருவர் இப்போது $100,000 மதிப்புள்ள சிங்கப்பூர் சேமிப்பு முறிகளை வைத்திருக்கலாம். இந்தக் அதிகபட்ச வரம்பு, $200,000 ஆக உயரும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு மாற்றங்களுமே 2019 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும். சிங்கப்பூர் சேமிப்பு முறிகள் திட்டம் 2015 அக்டோபரில் தொடங்கப்பட்டது. அது முதல் ஏறக்குறைய 100,000 தனிப்பட்ட முதலீட்டாளர்கள், சுமார் $3.7 பில்லியன் தொகையை அந்த முறிகளில் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!