‘நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்’

ஜகார்த்தா: இந்தோனீசியாவைத் தாக்கிய சுனாமியால் கொல்லப்பட்ட வர்களின் எண்ணிக்கை 200க்கு மேல் தாண்டியிருக்கும் வேளையில் அதில் தப்பிப் பிழைத்த ஒரு சில அதிர்ஷ்டசாலிகள் அந்தப் பயங்கர அனுபவத்தை நினைவுகூர்ந்துள்ள னர்.

ஜாவா கடலோரப் பகுதியில் இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த 'செவன்டின்' எனும் இசைக் குழுவின் பாடகரான ஃபஜார்சியா பாடிக்கொண்டிருந்த போதுதான் மேடையின் பின் பக்கத்திலிருந்து ராட்சச அலை தாக்கியது.

அடுத்த சில வினாடிகளில் அவர் கடலுக்குள் இருப்பதை உணர்ந்தார். 'பெருஷாஹான் லிஸ்டிரிக் நெகாரா' எனும் மின்சார நிறுவன ஊழியர்களுக்காக ஜாவாவின் தஞ்சோங் லெசுங் கடற்கரையில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டது. இசை நிகழ்ச்சி நடந்துகொண் டிருந்தபோதே பேரலை புகுந்து மேடையையும் மக்களையும் அடித்துச்சென்றது. இதில் மேளங்கள், வாத்திய இசைக் கருவிகள், ஒலி பெருக்கிகள் அனைத்தும் மேடை யோடு சுக்குநூறாக உடைந்து நொறுங்கின. பிரகாசமாக ஒளியூட்டப்பட்ட மேடையில் ஃபஜார்சியா பாடிக் கொண்டிருந்தபோது கண் இமைக் கும் பொழுதில் சுனாமி பேரலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

"இருட்டில் ஒன்றுமே பார்க்க முடியவில்லை, ஆனால் பலர் கதறி அலறுவதைக் கேட்க முடிந்தது," என்று தொலைக்காட்சிக்கு பேட்டி யளித்த ஃபஜார்சியா சொன்னார். "சில நொடிகளில் அழுகுரல்கள் குறைந்து மறைந்துவிட்டன. பலர் மூழ்கி இறந்துவிட்டதால் அடுத் தது நான்தான் என்று நினைத்தேன். கடலில் இருந்ததால் இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று நினைத்தேன். "என்னை நோக்கிப் பாய்ந்த நீரை எதிர்த்து நீந்தினேன். அந்த சமயத்தில் என் உயிரைக் காப் பாற்றுவது போல மிதக்கும் பெட்டி ஒன்று வந்தது. அந்தப் பெட்டியை ஒரேயடியாகப் பிடித்துக் கொண்டு மரத்தை அடைந்தேன்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!