அனைத்துலக வேட்டி தினம்

தமிழ்நாட்டில் அனைத்துலக வேட்டி தினம் நேற்று கடைப்பிடிக் கப்பட்டது. யுனெஸ்கோ அமைப்பு ஜனவரி 6ஆம் தேதியை அனைத் துலக வேட்டி தினமாக அறிவித்து இருக்கிறது. அதனையொட்டி அரசாங்க அதிகாரிகள் முதல் மாணவர்கள், இளைஞர்கள், சிறார்கள், பொதுமக்கள் வரை பலரும் நேற்று மாநிலத்தின் எல்லா இடங்களிலும் வேட்டி, சட்டை, துண்டில் பவனி வந்தார்கள். பல சிறார்களும் எடுப்பாக வேட்டியில் காட்சி அளித்தனர். இளைஞர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வேட்டி தயாரிப்பு நிறுவனங்களும் பல புதிய வசதிகளுடன் புதிய பாணி வேட்டிகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றன.

மாநிலம் முழுவதும் நேற்று பாரம்பரிய உடையில் பலரும் ஆடிப்பாடி களித்தனர். செல்ஃபி எடுத்துக்கொண்டனர். சமூக வலைத்தளங்களில் அனைத்துலக வேட்டி தினம் களைகட்டியது. உலக வேட்டி தினத்தை ஒட்டி தமிழக அரசாங்கம் தன்னுடைய அனைத்து இடங்களிலும் வேட்டி விற்பனைக்கு அனுமதித்திருந்தது. “இரண்டாவது ஆண்டாக நான் உலக வேட்டி நாளன்று வேட்டி, சட்டை, துண்டு அணிந்து கொண்டேன்,” என்று கே எஸ் கதிரவன் என்ற அரசாங்க ஊழியர் பெருமையுடன் குறிப்பிட்டார். கல்லூரி மாணவர்களும் தகவல் தொழில்நுட்ப ஊழியர் களும் பெருமையாக வேட்டிகளில் காட்சி அளித்தனர். “வேட்டி என்பது தமிழ்நாட்டின் கலாசாரம் மட்டுமல்ல. தென் இந்தியாவின் கலாசாரமாகவும் அது திகழ்கிறது,” என்று தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவரான ஜி வெங்கடேஷ் என்பவர் தெரி வித்தார். தமிழ் பேசும் இளையர்களி டையே பாரம்பரிய உடையான வேட்டி அணியும் விருப்பம் அதி கரித்து வருகிறது என்பதையே நேற்றைய சூழ்நிலை காட்டியது. இதற்கு உலக வேட்டி தினம் பெரிதும் உதவுகிறது.

புதுச்சேரி தலைமைச் செயலாளர் அஷ்வானி குமார் உள்ளிட்ட பல அரசாங்க ஊழியர்களும் வெள்ளிக்கிழமையே வேட்டி, சட்டை, துண்டுடன் நாள் முழுவதும் பணியாற்றினர். இந்தப் பாரம்பரிய உடை மிகவும் வசதியாக இருக்கிறது என்று அஷ்வானி குமார் கூறினார். படம்: இந்திய ஊடகம்