ஆந்திரா-சிங்கப்பூர் கூட்டமைப்பு வர்த்தக வளாகத்தின் பணி தொடக்கம்

புதிதாக எழவிருக்கும் ஆந்திரத் தலைநகர் அமராவதியில் புதிய நிறுவனங்கள் தங்கள் பணிகளைச் செயல்படுத்துவதற்குரிய முதல் கட்ட வர்த்தக வளாகத்தின் பணியை நேற்று சிங்கப்பூரும் ஆந் திரப் பிரதேசமும் தொடங்கி வைத் தன. அமராவதி நகரை உருவாக்கும் திட்டத்தின் மூலம் சிங்கப்பூருக்கும் ஆந்திராவுக்கும் இடையிலான இருதரப்பு உறவும் வர்த்தக நட வடிக்கைகளும் பன்மடங்கு அதிக ரித்துள்ளன. வர்த்தக வளாகத்தில் அமைக் கப்படும் வரவேற்புக் காட்சிக் கூடக் கட்டுமானத் திட்டத்தின் நில அகழ்வு நிகழ்ச்சியில் சிங்கப் பூரின் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் எஸ். ஈஸ்வரனும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கலந்துகொண்டனர். சிங்கப்பூர் நிறுவனங்களான அசெண்டாஸ்-சிங்பிரிட்ஜ், செம்ப் கார்ப் டிவெலப்மண்ட் ஆகியவை தான் இத்திட்டத்தின் பிரதான மேம்பாட்டாளர்கள். இவை இரண்டும் சேர்ந்து 6.84 சதுர கிலோ மீட்டர் நீளமுள்ள அமராவதி தலைநகரை, ஆந்திர அரசாங்கத்தின் நிறுவனமான அமராவதி மேம்பாட்டு நிறுவனத் துடன் இணைந்து அமைக்கும். அதில் அமைக்கப்படும் வர வேற்புக் காட்சிக்கூடம்தான் வர்த் தக வளாகத்தில் கட்டப்படவிருக் கும் முதலாவது கட்டடம்.

2.6 ஹெக்டர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் வர்த்தக வளாகம் நாள் ஒன்றுக்கு 2,000 முதல் 3,000 வருகையாளர்களைக் கையாளும் ஆற்றல் பெற்றிருக்கும். படம்: அசெண்டாஸ்-சிங்பிரிட்ஜ்