விளக்கொளி, தோரணங்களுடன் தமிழர் திருநாள் அலங்காரம்

எஸ்.வெங்கடேஷ்வரன்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக் கான ஒளியூட்டு நேற்று இரவு கேம்பல் லேனில் நடைபெற்றது. லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மர புடைமைச் சங்கத்தின் (லிஷா) ஏற்பாட்டில் 11வது முறையாக நடைபெற்ற விழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ இரவு 8 மணியளவில் ஒளியூட்டி சிறப்புச் செய்தார். அதனைத் தொடர்ந்து லிட்டில் இந்தியா வட்டாரம் பல வண்ண விளக்கொளியில் மின்னத் தொடங்கியது. பண்ணை விலங்கு கள் ஊர்வலம், விற்பனைச் சந்தை, அலங் காரங்கள் என்று பொங்கலை முன்னிட்டு லிட்டில் இந்தியா வட்டாரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இவ்வாண்டின் ஒளியூட்டு விவசாயத் தையும் விவசாயிகளையும் கருப்பொருட் களாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சிராங்கூன் சாலையில் பலவித ஒளி அமைப்புகளுடன் 32 தோரணங்கள் அமைக்கப்பட் டுள்ளன.

நேற்று தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை மெத்தம் 31 நாட்களுக்கு இந்த ஒளியூட்டு நீடிக்கும்.

லிட்டில் இந்தியாவின் நிகழ்ச்சிகள் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு மேலும் மெருகூட்டுவதாகக் குறிப்பிட்டார் லிஷாவின் கௌரவ செயலாளர் திரு ருத்திராபதி. இவ்வாண்டின் ஒளியூட்டு கரும்பு, பானை கள், பண்ணை விலங்குகள், கோல வடிவங்கள் போன்ற பொங்கல் பண்டிகை சார்ந்த சின்னங்களோடு காட்சியளிக்கும் என்றும் ஒளி அமைப்புகள் சிராங்கூன் சாலையிலிருந்து கிட்சனர் சாலை வரை நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!