பொங்கலை பொங்கலோ பொங்கலாக்கிய லிஷா

சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்கு முன், வீட்டிலேயே பொங்கல் வைத்து மாலை வேளையில் பள்ளியிலிருந் தும் வேலையிலிருந்தும் எல்லாரும் வீடு திரும்பியதும் குடும்பத்தினர் சேர்ந்து அறுசுவை உணவு உண்டு பொங்கலைக் கொண்டாடினர். மக்கள் பொங்கலுக்குத் தேவை யான பொருட்களை எளிதில் வாங் கிச் செல்லவும் பொங்கல் பெரிய அளவில் எடுப்பாகக் கொண்டாடப் படவேண்டும் என்பதற்காகவும் 2001ஆம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு கேம்பல் லேனில் பொங் கல் சந்தையை லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) தொடங்கியது.

அதில் சிறப்பு அங்கமாக இருப் பது மாட்டுப் பொங்கல் கொண்டாட் டம்தான். பால் பண்ணையிலிருந்து ஆடு, மாடுகள் வரவழைக்கப்பட்டன. தொடக்கப்பள்ளி மாணவர்களுக் கும் அடித்தள அமைப்புகளின் உறுப் பினர்களுக்கும் கற்றல் சுற்றுலா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பொதுமக்களும் அங்கு அமைக்கப் படும் தற்காலிகக் கூடாரத்தில் மாடு களுக்கு நடத்தப்படும் பூஜையைக் கண்டுகளிக்க முடிகின்றது.

பொங்கல் வைப்பது, கோலம் போடுவது என கடந்த சில ஆண்டு களாக இந்திய மரபுடைமை நிலையம் பலதரப்பட்ட பயிலரங்குகளையும் நடத்தி வருகிறது. இந்த அனுபவங்கள் சிங்கப்பூரர் களுக்கும் சுற்றுப் பயணிகளுக்கும் பெரிதும் வித்தியாசமானவை. பொங்கல் விழா பற்றிய விழிப் புணர்வு இதன் மூலம் பரவுகின்றது என்று லிஷா தலைவர் திரு ராஜ் குமார் சந்திரா தெரிவிக்கிறார். பண்டிகைக் காலத்தில் இங்கு வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களையும் மகிழ்விக்கும் விதத்தில் பல்வேறு கிராமியக் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப் படுகிறது.

"இதில் கிராமியக் கலைஞர்கள் பாரம்பரிய ஆடல், பாடல் அங்கங் கள் பலவும் இடம்பெறுகின்றன. அவை கிராமத்துப் பொங்கல் கொண்டாட்டங்களை நினைவுக்குக் கொண்டு வருகின்றன. "அந்தக் கிராமிய இசையைக் கேட்பதற்காகவே ஒரு கூட்டம் லிட்டில் இந்தியாவிற்கு வந்துவிடு கிறது," என்று அவர் விளக்கினார். காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாகக் கட்டிக்காக்கப் பட்டுவருகின்ற பொங்கல் பண் டிகைப் பாரம்பரியத்தை இந்தக் கால இளையர்களும் ஆர்வத்துடன் கட்டிக்காப்பார்கள் என்று லிஷா அமைப்பின் தலைவரான திரு ராஜ்குமார் நம்புகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!