லிட்டில் இந்தியாவில் களைகட்டிய பொங்கல்

ப. பாலசுப்பிரமணியம்

பலருக்கும் நேற்று வழக்கமான வேலை நாள் என்றாலும், தைப் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக லிட்டில் இந்தியாவில் கடை கடை யாய் ஏறி இறங்கினர் மக்கள். குறிப்பாக லிட்டில் இந்தியா கேம்பல் லேன் சாலையிலுள்ள பொங்கல் சந்தையில் பண்டிகைக் குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்க நேற்று பிற்பகலிலிருந்து அங்கு கூட்டம் வந்து குவிந்தது. காய்கறிகள், பழங்கள், மலர் கள், கரும்புகள், வாழையிலைகள், மாவிலைகள், இனிப்புப் பலகாரங் கள், பொங்கல் பானைகள், புத் தாடைகள் என அனைத்துமே ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அச்சந்தை அமைந்திருந்தது.

பொங்கல் சந்தைக்கு வருவதற் காக வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு மனைவியுடன் நேற்று பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்க வந்திருந்தார் கணினித் துறையில் பணியாற்றும் 45 வயது திரு திருமேனி மாரிமுத்து. தாம் வசிக்கும் சிராங்கூன் வட்டாரத்தில் இந்திய மளிகைக் கடைகள் இருந்தாலும், குறிப்பிட்ட சில சமையல் பொருட்களுக்கு லிட்டில் இந்தியாவுக்கு வரவேண்டி உள்ளதாக அவர் குறிப்பிட்டார். பொங்கல் பண்டிகை உணர் வைச் சந்தை வெளிக்கொணர்ந்து வருவதாகக் கூறிய அவர், தம் இரு மகள்களையும் கடந்த சனிக் கிழமை இங்கு அழைத்து வந்து பொங்கல் கொண்டாட்டங்களின் பின்னணியை விளக்கியதாகச் சொன்னார்.

பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்கக் கடைசி நேரத்தில் லிட்டில் இந்தியாவிற்கு வந்து குவியும் மக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடிய சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம். இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினார் அப்பல்கலைக்கழகத்தின் லீ குவான் இயூ பொதுக் கொள்கை ஆய்வுப் பள்ளியினுடைய கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளரான டாக்டர் சித்ரா ராஜாராம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Aug 2019

‘அக்கறைக்குரியதாக நீடிக்கும் இனவாதம்’