பிள்ளைகளையும் பெரியவர்களையும் கவர்ந்த சூரிய பொங்கல்

வைதேகி ஆறுமுகம்

சூரிய பொங்கல் என்னும் சிறப்புக் கொண்டாட்டத்தை முன்னிட்டு { நாராயண மிஷன் இல்லத்திலிருந்து 50 இல்லவாசிகள் கேம்பல் லேனில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந் தனர். அங் மோ கியோ-ஹவ்காங் பிசிஎஃப் பாலர் பள்ளியைச் சேர்ந்த பிள்ளைகளும் வந்திருந்து நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த் தனர். அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கல்வி, சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடா ளுமன்றச் செயலாளர் டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் மற்ற சமூகத் தலைவர்களுடனும் நிகழ்ச்சிக்கு வந் திருந்தோருடனும் சேர்ந்து சர்க்கரைப் பொங்கல் சமைத்தார். லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபு டமைச் சங்கம் (லிஷா) ஏற்பாடு செய்தி ருந்த இந்நிகழ்ச்சியைச் சுவாரசியப்படுத் தும் வகையில் நடனம், பாட்டு, இசை ஆகியன இடம்பெற்றன. { நாராயண மிஷன் இல்லத்தைச் சேர்ந்த இரண்டு இல்லவாசிகள் இந் நிகழ்ச்சியைப் பற்றிய தங்களின் கருத்துக் களைப் பகிர்ந்துகொண்டனர். மூன்றாவது முறையாக இந்நிகழ்ச் சிக்கு வருகைபுரிந்த திருவாட்டிப் பூங்கா வனம் கிருஷ்ணன், 79, கூறுகையில் "பாலர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் படைத்த ஆடல் நிகழ்ச்சி மிகவும் சிறப் பாக இருந்தது. "சின்னஞ்சிறு பிள்ளைகள் பொங்கல் குதூகலத்திற்காக ஒன்றுகூடியதைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது," என்றார். அவரைப்போல் 'பிசிஎஃப்' பாலர் பள்ளியைச் சேர்ந்த தமிழ் மாணவர்களின் நடன நிகழ்ச்சியை ரசித்த { நாராயண மிஷன் இல்லத்தைச் சேர்ந்த மற்றொரு இல்லவாசியான திரு ராமச்சந்திரன் கண்ணப்பன், "மாணவர்கள் சிறு வயதில் துணிச்சலாக மேடையில் எறி நிகழ்ச்சி படைத்தது பெருமைக்குரிய விஷயம். "இவர்களைப்போல் மற்ற பிள்ளைக் களும் தங்களின் திறன்களை வெளிப் படுத்த வேண்டும்," என்று தமது மன மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். தைத்திருநாளில் பொதுமக்கள் முன்னிலையில் இளம்பிள்ளைகளும் முதியோரும் ஒன்றாக இணைந்து பொங்கல் சமைத்ததோடு கொண்டாட்ட குதூகலத்திலும் ஈடுபட்டது பலரையும் கவர்ந்தது.

சூரிய பொங்கல் நிகழ்ச்சியில் ஆவலுடன் கலந்துகொண்ட பிள்ளைகள் கல்வி, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிமுடன் சேர்ந்து சர்க்கரைப் பொங்கல் சமைத்து மகிழ்ந்தனர். படம்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!