மக்களை மகிழ்வித்த மாட்டுப் பொங்கல்

வைதேகி ஆறுமுகம்

வேளாண் பெருமக்களுக்குப் பேருதவியாய் இருந்துவரும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளான மாட்டுப் பொங்கல் லிட்டில் இந்தியாவில் நேற்று விமரிசை யாகக் கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கலை ஒட்டி ஹேஸ்டிங்ஸ் சாலையிலும் கேம்பல் லேனிலும் நேற்று மாலை சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நிகழ்ச்சிக்கு வருவோரைக் குதூகலப் படுத்தும் வகையில் மூன்று பசுக்கள், இரண்டு கன்றுகள், ஒரு காளை மாடு, இரண்டு ஆட்டுக் குட்டிகள் ஆகியவை விக்னேஷ் பால் பண்ணையிலிருந்து ஹேஸ்டிங்ஸ் சாலைக்கு வரவழைக்கப் பட்டிருந்தன.

நாதஸ்வர வாத்தியம் முழங்க, கோமாதா, மகாலட்சுமி பூசைகள் இடம் பெற்றன. பூசைகளுக்கிடையே அக்கால்நடை களுக்கு ஆரத்தி எடுத்து, பொட்டிட்டு, மாலைகள் சூட்டி, சேலை அல்லது வேட்டி கட்டி அழகு சேர்த்தனர் விக்னேஷ் பால் பண்ணை நிர்வாகிகள். மாட்டுப் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள குடும்பத்துடன் வந்திருந் தார் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங். பொதுமக்களில் ஒருவராய் நின்று, நிகழ்ச்சியைக் கண்டு களித்து, மகள்களுடன் கால்நடைகளைத் தொட்டு மகிழ்ந்தார் திரு பிரித்தம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!