புதிய குறுக்குத் தீவு எம்ஆர்டி வழித்தடத்தில் 12 நிலையங்கள்

சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட இருக்கும் புதிய குறுக்குத் தீவு எம்ஆர்டி வழித்தடத்தின் முதற்கட்ட சீரமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட ரயில் பாதையின் நீளம் 29 கிலோ மீட்டர் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று தெரிவித்தார். அந்தப் பாதை தற்போதைய சாங்கி, லோயாங், பாசிர் ரிஸ், ஹவ்காங், அங் மோ கியோ ஆகிய எம்ஆர்டி நிலை யங்களின் வழியாக அமையும் என்றும் வழிநெடுக 12 எம்ஆர்டி நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறி னார். “குறுக்குத் தீவு எம்ஆர்டி வழித் தடப் பணிகள் 2029ஆம் ஆண்டில் நிறைவுறும்போது கிட்டத்தட்ட 100,000 குடும்பங்கள் சிறந்த போக்குவரத்து இணைப்பையும் குறைந்த பயண நேரத் தையும் பெறும்,” என்று திரு கோ குறிப்பிட்டார். புதிதாக அமையவிருக்கும் பிரைட் ஹில் எம்ஆர்டி நிலையம் தாம்சன்= ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையிலும் இடம்பெறும் என்றும் அது காலப்போக் கில் குறுக்குத் தீவு வழித்தடத்தை உள்ளடக்கிய இணைப்பு நிலையமாக ஆக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வடக்கு=தெற்கு, கிழக்கு=மேற்கு, வடக்கு=கிழக்கு ஆகிய வழித்தடங்க ளில் தற்போது காணப்படும் பயணி களின் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் அதிகம் பேர் மாறிச் செல் லக்கூடியதாக புதிய எம்ஆர்டி வழித் தடம் அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜாலான் புரோவில் நிகழ்ந்த மாபெரும் எரிவாயுத் தோம்பு தீச்சம்ப வத்தை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைப்புத் தளபதிகளாகச் செயல்பட்ட கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி (இடது), மேஜர் நவின் பாலகிருஸ்ணன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Jun 2019

சவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பாளர்கள்