அலோய்‌ஷியஸ் பாங்கிற்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு

நியூசிலாந்தில் ராணுவப் பயிற்சி யில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது படுகாயமுற்று உயிரிழந்த உள்ளூர் நடிகர் அலோய்‌ஷியஸ் பாங்கின் உடல் நேற்று சிங்கப்பூர் வந்தடைந்தது.
ராணுவ மரியாதையுடன் அவருக்கு நாளை இறுதிச் சடங்கு நடத்தப்படும். அவரது உடல் மண்டாய் தகனச் சாலையில் தகனம் செய்யப்படும் என்று தற்காப்பு அமைச்சு நேற்று கூறியது.
அலோய்‌ஷியசின் உடல் சிங்கப்பூர் வந்ததும் அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
அந்த நிகழ்வில் ராணுவத் தலைவர் கோ சி ஹாவுடன் ராணுவ வீரர்களும் அலோய்‌ஷி யசின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும்  தற்காப்புப் படைத் தலைவர் மெல்வின் ஓங்கும் பாய லேபார் விமானத் தளத்தில் ஆலோய்‌ஷியசின் குடும்பத்தி னரைச் சந்தித்து தங்கள் அனுதா பங்களைத் தெரிவித்துக்கொண் டனர்.
இன்று நண்பகலிலிருந்து நாளை நண்பகல் வரை அலோய்‌ஷியசின் உடலுக்குப் பொதுமக்கள் 82A மெக்பர்சன் லேனுக்குச் சென்று மரியாதை செலுத்தலாம்.
கடந்த சனிக்கிழமையன்று ஹவிட்சர் கவச வாகனத்தில் பழுதுபார்க்கும் பணியில் 28  அலோய்‌ஷியஸ் பாங் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பீரங்கி இறக்கப்பட்டபோது அவ ருக்கு நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மேற்கு வங்காளத்தில் ஏழாவது நாளாக நீடித்துவரும் போராட்டம். படம்: இபிஏ

17 Jun 2019

போராட்டத்தைத் தொடரும் மேற்கு வங்காள மருத்துவர்கள்;  இந்தியா முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

ஹாங்காங் நகர வீதிகள் நேற்று மனிதக் கடலாகக் காட்சியளித்தன. படம்: ராய்ட்டர்ஸ்

17 Jun 2019

ஹாங்காங்கில் மீண்டும் எதிர்ப்புப் பேரணி 

ஓமான் கடல்பகுதியில் நேற்று இரு எண்ணெய் கப்பல்களில் குண்டு வைக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

14 Jun 2019

எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக வெளிவந்த காணொளி