பிரதமர்: விஸ்மா கேலாங் சிராய் சிங்கப்பூரர்களின் கலாசார மையம்

புதிய விஸ்மா கேலாங் சிராயின் திறப்பு விழாவுக்கு வந்திருப்பவர்களைச் சந்திக்கும் பிரதமர் லீ சியன் லூங் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய விஸ்மா கேலாங் சிராய் அனைத்து சிங்கப்பூரர்களுக் குமான சமூக, கலாசார மையம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். கேலாங் சிராய் வட்டாரம் சிங்கப்பூரின் பல்லின, பல சமய சமூகத்தைப் பிரதிபலிப் பதாக அவர் கூறினார்.
சமூக, கலாசார மையமான விஸ்மா கேலாங் சிராயைப் பிரதமர் லீ நேற்று அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். புதிய மையத்தின் பாரம்பரிய மலாய் கட்டட அமைப்பு மற்றும் அங்கு வாடகைக்கு இருக்கும் பல்வேறு அமைப்புகள் அதன் கலாசார அடையாளத்தை வலுப்படுத்தும் என்றார் பிரதமர் லீ.
“பல்வேறு மலாய்/முஸ்லிம் அமைப்புகள், சமூக மற்றும் அரசாங்க அமைப்புகளை ஒரே கூரையின்கீழ் கொண்டு வந்து ஒரு சமூக, கலாசார மையமாக திகழ்வதே விஸ்மா கேலாங் சிராயின் இலட்சியம். இது பல்வேறு திட்டங்களை நடத்த விஸ்மா கேலாங் சிராய்க்கு வழி வகுக்கும். இதன் மூலம் சமூகத் தின் தேவைகளும் பூர்த்தியாகும்,” என்று பிரதமர் லீ தெரிவித்தார்.
புதிய மையம் எங்கு அமான் சாலையில் அமைந்துள்ளது. விஸ்மா கேலாங் சிராய்க்கான திட்டத்தைப் பிரதமர் லீ 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற தேசிய தினப் பேரணி உரையில் முதன்முதலில் அறிவித்தார்.