தென்பிலிப்பீன்ஸ் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு: 27 பேர் மரணம்

பிலிப்பீன்சில் முஸ்லிம்கள் அதிக மாக வசிக்கும் சூலு என்ற மாநி லத்தில் உள்ள ரோமன் கத்தோலிக் கத் தேவாலயம் ஒன்றில் நேற்று வழிபாட்டு நேரத்தின்போது இரண்டு குண்டுகள் வெடித்ததில் குறைந்தபட்சம் 27 பேர் கொல்லப் பட்டுவிட்டனர். மேலும் பலர் காயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட் டது. ஜோலோ என்ற சுமார் 700,000 பேர் வசிக்கும் தீவில் உள்ள ஒரு தேவாலயத்தில் காலை சுமார் 8 மணிக்கு முதல் குண்டு வெடித் தது. சில நிமிடங்கள் கழித்து அந்தத் தேவாலயத்தின் சுற்றுச்சுவ ருக்கு வெளியே மோட்டார் சைக் கிளில் வைக்கப்பட்டிருந்த வேறு ஒரு குண்டு வெடித்தது. இந்தச் சம்பவங்கள் பற்றி தெரிவித்த வட்டார போலிஸ் இயக்குநர் மிஜார்ஸ் என்பவர், மொத்தம் 27 பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும் 71 பேர் காயம் அடைந்துவிட்டதாகவும் கூறினார்.

அந்தத் தேவாலயத்திற்குச் செல்லும் முக்கியமான சாலையை ராணுவம் அடைத்துவிட்டது. மரணம் அடைந்தவர்களின் உடல் களுடன் காயம் அடைந்தவர்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். “அரசாங்க எதிரிகள் இத்தகைய தாக்குதல்களை நடத்தி அரசாங் கத்தின் ஆற்றலைச் சோதித்துப் பார்க்க சவால்விடுகிறார்கள். இந்தச் சவாலை ராணுவம் திறம்பட சமாளிக்கும். குற்றவாளிகளைத் துடைத்து ஒழிக்கும்,” என்று பிலிப் பீன்ஸ் அதிபருக்கான பேச்சாளர் சால்வடோர் பனிலோ குறிப்பிட்டார். முழு விழிப்புநிலையில் இருக் கும்படி ராணுவத்திற்குக் கட்டளை யிடப்பட்டு இருப்பதாக தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இரட்டைக் குண்டு வெடிப்புக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்க வில்லை. இருந்தாலும் நாட்டின் தென் பகுதியில் தன்னாட்சி வட் டாரம் ஒன்றை அமைப்பதன் தொடர்பில் அண்மையில் ஏற்பட்ட இணக்கத்தை அந்தப் பகுதியில் செயல்படும் அபு சயேப் உள்ளிட்ட சில தரப்புகள் எதிர்ப்பதாகக் கூறப்படுகிறது. மோரோ இஸ்லா மிய விடுதலை முன்னணி அந்த ஏற்பாட்டை வரவேற்கிறது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜுவல் சாங்கியில் உள்ள 'நைக்கி' கடையில் விற்கப்படும் டி-சட்டைகளில் தமிழ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Apr 2019

'சும்மா செஞ்சு முடி' - 'நைக்கி' தமிழ்