94 ஆண்டு ‘தமிழ் நேசன்’ நாளையுடன் விடைபெறுகிறது

உலகின் மிகப் பழமையான தமிழ் நாளிதழ்களில் ஒன்றான மலேசியா வின் ‘தமிழ் நேசன்’ நாளையோடு நிரந்தரமாக மூடப்படுவதாக அறி விக்கப்பட்டுள்ளது. 
1924 செப்டம்பர் 24ல் தமிழ் நேசனின் முதல் பிரதி வெளியா னது. கிட்டத்தட்ட 94 ஆண்டு களுக்குப் பின்னர் பொருளியல் நெருக்கடியால் அது தனது பணி களை நிறுத்திக் கொள்வதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
மலேசியாவின் முன்னோடி நாளிதழாகவும் சிங்கப்பூர் மக்க ளிடையே வரவேற்பைப் பெற்ற ஒன் றாகவும் விளங்கிய தமிழ் நேசன் பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து வெளிவராது என்ற செய்தியைக் கேட்டு சில வாசகர்கள் அதிர்ச்சி யில் மூழ்கினர். 
லிட்டில் இந்தியா பகுதியில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் 65 வயது பெரியய்யா தேவர் இந்திரா, 12 வயது முதல் தமிழ் நேசன் நாளிதழைப் படித்துவருவ தாகக் குறிப்பிட்டார். இன்றுவரை தமிழ் முரசு, தமிழ் நேசன் ஆகிய இரு நாளிதழ்களையும் தினமும் படிக்கும் பழக்கமுடைய அவர், அரசியல், நடப்பு விவகாரம், மருத் துவம் குறித்த செய்திகள், திரைப்படச் செய்திகள் போன்ற வற்றை விரும்பிப் படிப்பதாகக் கூறினார். 
“அண்டை நாட்டில் வாழும் தமிழர்கள் குறித்த செய்திகளை தமிழ் நேசன் மூலம் அறிந்து கொள்ளலாம். இத்தனை ஆண்டு களாகப் படித்துவந்த எனக்கும் என்னைப் போன்ற வாசகர்களுக் கும் சோகமான செய்தி இது,” என்று திருவாட்டி இந்திரா (படம்) கூறினார். சிராங்கூன் சாலை ஸ்ரீ கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் கடையில் பணிபுரியும் திரு தியாகராஜன், 79, ஆகப் பழமையான தமிழ் நாளிதழ்களில் ஒன்று இனி இல்லை என்பது கவலை தருகி றது என்றார். “தமிழ் முரசு நாளி தழை மட்டும் இனி வாங்கிப் படிப் பேன். தமிழ் நாளிதழ்களுக்கு நமது ஆதரவை வழங்கவேண்டும்,” என் றார் அவர். <P>
செய்தி: இர்ஷாத் முஹம்மது, வைதேகி ஆறுமுகம், முவாமினா