தவறி விழுந்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் உயிரிழந்தார்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கீழே விழுந்து படுகாயமடைந்த அர்ச் சகர் உயிரிழந்துவிட்டார். 
வெங்கடேஷ், 53, என்னும் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் 18 அடி உயர துளசி மாலையை அணி வித்ததும் கால் இடறி கீழே விழுந்தார், 11 அடி உயர மரப்பலகை மேடையி லிருந்து கீழே விழுந்த அவரது தலை யில் பலத்த அடிபட்டதாகவும் அதனால் அதிக ரத்தம் வெளியானதாகவும் கூறப்பட்டது.
இதர அர்ச்சகர்களும் கோயில் ஊழியர்களும் அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒறில் ஆபத்தான நிலையில் அனுமதித்தனர். பின்னர் நாமக்கல் அரசு மருத்துவ மனையில் கோமா நிலையில் வெங் கடேஷ் சேர்க்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர் கள் அவரது உடல்நிலை கவலைக்கிட மாக உள்ளதாகத் தெரிவித்தனர். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.50 மணியளவில் அவர் உயிரிழந் ததாக அறிவிக்கப்பட்டது.
வெங்கடே‌ஷுக்கு ஜெயலட்சுமி, 46, என்ற மனைவியும் அரவிந்தன், 26, என்னும் மகனும் உள்ளனர். ஆஞ்ச நேயர் கோயில் அர்ச்சகரான தமது மூத்த சகோதரர் நாகராஜனுக்கு உதவி செய்யும்பொருட்டு வெங்கடேஷ் அங்கு உதவி அர்ச்சகராகப் பணியாற்றி வந்ததாகவும் கோயிலின் அதிகாரபூர்வ அர்ச்சகராக சம்பளப் பட்டியலில் அவரது பெயர் இல்லை என்றும் தெரி விக்கப்பட்டது.
இந்தக் கோயிலில் இதற்கு முன் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Loading...
Load next