காற்றுத்தரம் மோசம்; பேங்காக்கில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கை புகைப்பனி சூழ்ந்ததால் அந்நகரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள 437 பள்ளி களுக்கு நேற்று முதல் வெள்ளிக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடந்த பல வாரங்களாகவே பேங் காக்கில் புகைமூட்டம் இருந்து வரு கிறது. இதனால் மக்கள் முகக்கவசம் அணிந்தபடியே நடமாட வேண்டியுள் ளது. புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தடுமாறி வரும் அரசாங்கத்தை அவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வாகனங்கள் வெளியிடும் புகை, கட்டுமானப் பணிகளால் வெளியாகும் தூசு துகள்கள், அறுவடைக்குப் பின் வயல்களில் எஞ்சிய தாவரங்களின் அடித்தாள்களை எரிப்பது, தொழிற் சாலைகளில் இருந்து வெளியாகும் மாசு ஆகியவையே அங்கு நிலவும் காற்று மாசுபாட்டிற்குக் காரணங் களாகக் கூறப்படுகின்றன.

சீனப் புத்தாண்டு நெருங்கும் நிலை யில் ஊதுவத்திகளைக் கொளுத்த வேண்டாம் என்றும் அரசாங்கம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. செயற்கையாக மழை பெய்ய வைப்பது உட்பட காற்றுத் தூய்மைக் கேட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இந்த நிலையில், நேற்றுப் பிற்பகலில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த பேங்காக் மாநகர நிர்வாகம், 1,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியை ‘கட்டுப்பாட்டுப் பகுதி’யாக வும் அறிவித்தது. “அடுத்த மாதம் 3, 4ஆம் தேதி வரை இந்த மோசமான நிலை நீடிக்கும். அதனால்தான் பள்ளிகளை மூட உத்தரவிட்டேன்,” என்றார் பேங்காக் ஆளுநர் அஸ்வின் குவான்முவாங். அடுத்ததாக பூங்காக்களில் உடற் பயிற்சி செய்யவேண்டாம் என எச்சரிக் கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மேற்கு வங்காளத்தில் ஏழாவது நாளாக நீடித்துவரும் போராட்டம். படம்: இபிஏ

17 Jun 2019

போராட்டத்தைத் தொடரும் மேற்கு வங்காள மருத்துவர்கள்;  இந்தியா முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

ஹாங்காங் நகர வீதிகள் நேற்று மனிதக் கடலாகக் காட்சியளித்தன. படம்: ராய்ட்டர்ஸ்

17 Jun 2019

ஹாங்காங்கில் மீண்டும் எதிர்ப்புப் பேரணி 

ஓமான் கடல்பகுதியில் நேற்று இரு எண்ணெய் கப்பல்களில் குண்டு வைக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

14 Jun 2019

எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக வெளிவந்த காணொளி