மெர்டேக்கா தலைமுறைத் திட்டம் மூலம் பலனடைவர்

முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்திற்குத் தகுதி பெறத் தவறிய மூத்த சிங்கப் பூரர்கள் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டத்தில் இடம் பெற்று பலன்பெறுவர் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித் துள்ளார்.
1949ஆம் ஆண்டு அல்லது அதற்குமுன் பிறந்து, 1996ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் குடி யுரிமைத் தகுதி பெற்றவர்களும் 60 முதல் 69 வயதுக்குட்பட்ட சிங்கப்பூரர்களும் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டத் தின் மூலம் பலனடைவர். பல பில்லியன் வெள்ளி மதிப்பிலான இந்தத் திட்டம் மூலம் தங்களது சுகாதாரப் பராமரிப்புச் செலவு களைச் சமாளிக்க அவர்களுக்கு உதவி கிட்டும்.
இம்மாதம் 18ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப் படவுள்ளது. அப்போது நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்டும் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கும் மெர்டேக்கா தலை முறைத் தொகுப்புத் திட்டம் பற்றிய விவரங்களை அறிவிப்பர் என்று பிரதமர் கூறினார்.
கரையோரப் பூந்தோட்டங் களில் நடைபெற்ற மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த கிட்டத் தட்ட 200 பேரைக் கௌரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திரு லீ இதனைத் தெரிவித்தார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

9 கூண்டுகளில் அடைக்கப்பட்டு படகு மூலம் கடத்தப்பட்டபோது நாய்க்குட்டிகள் குரைக்கும் சத்தம் காட்டிக்கொடுத்தது. படம்: ஏவிஏ

20 Jun 2019

ஜோகூரிலிருந்து கடல் வழியாக 23 நாய்க் குட்டிகளை கடத்திவர முயன்றவருக்கு சிறை