விழாக்கால மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட பிரதமர்

டெக் கீ குடிமக்கள் ஆலோசனைக் குழு அந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 
470 மூத்த குடிமக்களுக்கு விழாக்கால மகிழ்ச்சியைப் பரப்பியது. நேற்று ‘காம்கேர்’, டெக் கீ உணவு பற்றுச்சீட்டுத் திட்டம் ஆகியவற்றின் பயனாளர்களுக்கு வளம், அமைதி, அன்பு ஆகியவற்றைக் குறிக்கும் விதத்தில் பணம், பேரங்காடிப் பற்றுச்சீட்டுகள் ஆகியவற்றைக் கொண்ட சிவப்பு நிற உறைகளையும் மாண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் உள்ளிட்ட அன்பளிப்புப் பைகளையும், அங் மோ கியோ குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகரான பிரதமர் லீ சியன் லூங் வழங்கினார். அப்பகுதியில் புளோக் 341க்கு அருகில் அமைந்திருக்கும் சந்தையிலும் பொதுமக்களுக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜாலான் புரோவில் நிகழ்ந்த மாபெரும் எரிவாயுத் தோம்பு தீச்சம்ப வத்தை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைப்புத் தளபதிகளாகச் செயல்பட்ட கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி (இடது), மேஜர் நவின் பாலகிருஸ்ணன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Jun 2019

சவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பாளர்கள்