பிரதமர் லீ: வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தொடர்ச்சியான மேம்பாடு தேவை

மெதுவடைந்து வரும் உலகப் பொருளியலும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடரும் வர்த்தகப் பதற்றநிலையும் சிங்கப்பூரைப் பாதிக்கும்.  எனவே, இவ்வாண்டின் வளர்ச்சி வலுவடை யாமல் போகலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
“சவால்களை சிங்கப்பூர் எதிர்நோக்குகிறது” என்ற திரு லீ, “நம்மைத் தொடர்ந்து மேம்படுத்துவதுடன் ஊழியர்களின் வாழ்க் கையை மேம்படுத்துவதும் முக்கியம்,” என்றார்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக் கும் இடையேயான ஆகாயவெளி பிணக்கு பற்றிய செய்தியாளர் களின் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், “மலேசியாவுடன் சிங்கப் பூர் பேச்சு நடத்தும். சாங்கி சுமூகமாக தொடர்ந்து செயலாற்று வதை சிங்கப்பூர் உறுதிசெய்ய வேண்டும், மலேசியாவும் அதன் விமானநிலையங்கள் சுமூகமாகச் செயல்படுவதையும்  இந்த வட்டாரமெங்கும் போக்குவரத்து நடைபெறுவதையும் உறுதிசெய்ய வேண்டும்,” என்றார் பிரதமர்.