பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவருக்கு அதிக இடங்கள்

தொழில்முனைப்பில் சிறப்பு ஆற் றலுள்ள பலதுறைத் தொழிற் கல்லூரி மாணவர்களுக்காக சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் (என்யுஎஸ்) புதிய மாணவர் சேர்க்கைத் திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
சிங்கப்பூரில் நிலவி வரும் தொழில்முனைப்புச் சூழலில் என்யுஎஸ் முன்னோடியாகவும் முக் கிய உந்துசக்தியாகவும் இருந்து வருகிறது. புத்தாக்க, தொழில் முனைப்புக் கட்டமைப்பில் சிங்கப்பூரை ஒரு சிறந்த இடத்தில் வைப்பதற்கு இத்தொழில்முனைப்பு பாடத்திட்டம் உதவும் என நேற்று திட்டம் குறித்து அறிவித்த என்யுஎஸ்சின் மூத்த துணைத் தலைவர் ஹோ டெக் ஹுவா விவரித்தார்.
உலகின் வெவ்வேறு வர்த்தகத் துறைகளில் தொழில்முனைவர் களைப் பேணி வளர்க்கும் நோக் கில் என்யுஎஸ் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
நாட்டின் ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் பட்டயக் கல்வி பயிலும் மாணவர்களில் தொழில்முனைப்புத் திறன் மேலோங்கிக் காணப்பட்டால் அவர் களை இத்திட்டத்திற்கு நியமனம் செய்யுமாறு என்யுஎஸ் கேட்டுக் கொள்கிறது.
தங்களின் பலதுறைத் தொழிற் கல்லூரிகளிலுள்ள தொழில் முனைப்பு தொடர்பான திட்டங் களில் பங்கேற்கும் மாணவர் களையும் இது உள்ளடக்கும்.
ஒவ்வொரு பலதுறைத் தொழிற் கல்லூரியும் 40 மாணவர்களை நியமிக்க, என்யுஎஸ் மொத்தம் 200 பேரை எதிர்பார்க்கிறது.
இப்புதிய திட்டத்தின்கீழ் சேர்க் கப்படும் மாணவர்கள் என்யுஎஸ்சின் தொழில்துறைப் பங்காளித்துவ உறவுகளிலிருந்தும் அனுபவரீதியான தொழில்முனைப் புக் கல்வியிலிருந்தும் பலனடைவர் என்று பேராசிரியர் ஹோ கூறினார்.

STFILE PHOTO