மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து

மிடில் ரோடு, குவீன் ஸ்திரீட் சந்திப்பில் நடந்த விபத்தில் மூன்று வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின.
இரண்டு வெள்ளை நிற கார் களும் ஒரு டாக்சியும் சம்பந்தப் பட்டிருந்த இவ்விபத்தில் மூவர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 35 வயது டாக்சி ஓட்டுநரும் அவரின் 29 வயது பயணியும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் ஒரு காரின் 38 வயது ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டனர். 
விபத்து குறித்து சனிக்கிழமை பின்னிரவு 1.49 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
இன்னொரு வெள்ளை நிற காரின் ஓட்டுநர் சம்பவ இடத் திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக ‘வான்பாவ்’, ‘‌ஷின் மின்’ சீன நாளிதழ்கள் தெரிவித்தன.
ஒரு வெள்ளை நிற காரின் முன்பகுதியும் இடப்பக்கமும் பெரும் சேதம் அடைந்திருந்ததைக் காட்டும் படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன. விபத்தின் தாக்கத்தால் அந்த காரின் காற் றுப்பைகளும் விரிவடைந்து காணப்பட்டன.
மற்றொரு வெள்ளை காரின் முன்பகுதியும் சேதமடைந்திருந் ததுடன் சாலை எங்கும் சிதைவு கள் கிடக்கக் காணப்பட்ன.
விபத்து குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜுவல் சாங்கியில் உள்ள 'நைக்கி' கடையில் விற்கப்படும் டி-சட்டைகளில் தமிழ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Apr 2019

'சும்மா செஞ்சு முடி' - 'நைக்கி' தமிழ்