முதல்வர் சந்திரபாபு நாயுடு: நரேந்திர மோடி நாட்டை ஆள பொருத்தமற்றவர்

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத் துக்குச் சிறப்பு அந்தஸ்து தர மறுக்கும் பாஜக அரசாங்கத்தை எதிர்த்து அந்த மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு புது டெல்லியில் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். 
காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட ஏறக்குறைய எல்லா எதிர்க்கட்சிகளின் ஆதர வுடன் போராட்டம் நடத்திய நாயுடு, பாஜக அரசையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக வசை பாடினார். 
டெல்லியில் உள்ள ஆந்திர பவன் வளாகத்தில் நேற்று இரவு 8 மணி வரை சாப்பிடாமல் மேடை யிலேயே தன் ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட நாயுடு, தனது கோரிக்கையை வலியுறுத்தி இன்று அதிபரை நேரில் சந்தித்து மனு அளிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல கட்சிகளின் பேராளர்கள் உண்ணாவிரத மேடைக்குச் சென்று நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
உண்ணாவிரதப் போராட்டத் தில் பேசிய நாயுடு, பிரதமர் நரேந் திர மோடி இந்தியாவை ஆள பொருத்தமற்றவர் என்று சாடினார். 
ஏற்கெனவே ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காமல் ஆந்திர மக்களின் எதிர்ப்புகளைச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் மோடி, வெந்த புண்ணில் உப்பைத் தடவுவதுபோல் ஞாயிற்றுக்கிழமை ஆந்திராவின் குண்டூருக்குச் சென்று வாய் திறந்து இருக்கிறார் என்றார் திரு நாயுடு.
ஆந்திராவில் உரையாற்றிய மோடி, தெலுங்கு தேசத்தைத் தொடங்கிய என்டி ராமராவின் மருமகனான சந்திரபாபு நாயுடு, தன்னுடைய மாமாவின் முது கிலேயே குத்திவிட்டார் என்று பேசி இருந்தார். ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கிடைப்பதைவிட அதிக சலுகைகளை அந்த மாநிலத்திற்கு தமது அரசாங்கம் வழங்கி வருவதாகவும் திரு மோடி குறிப்பிட்டார்.  
இதுபற்றி நேற்று புதுடெல்லி யில் கருத்து கூறிய நாயுடு, “உன் சுயமரியாதையை யாராவது தாக் கினால் அவர்களைச் சும்மா விடாதே. அவர்களுக்கு தக்க பாடம் போதித்துவிடு என்று என் னுடைய மாமா எனக்குப் போதித்து இருக்கிறார். 
“ஆகையால் மோடியை சும்மா விடமாட்டோம். அவருக்குச் சரி யான பாடம் புகட்டுவோம். டெல்லி யிலேயே உட்கார்ந்துகொண்டு தப்பிவிடலாம் என்று மோடி கனவு காண்கிறார். தோழமை கட்சிகளின் ஆதரவுடன் அவரை அகற்று வோம்,” என்றார் திரு நாயுடு.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மேற்கு வங்காளத்தில் ஏழாவது நாளாக நீடித்துவரும் போராட்டம். படம்: இபிஏ

17 Jun 2019

போராட்டத்தைத் தொடரும் மேற்கு வங்காள மருத்துவர்கள்;  இந்தியா முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

ஹாங்காங் நகர வீதிகள் நேற்று மனிதக் கடலாகக் காட்சியளித்தன. படம்: ராய்ட்டர்ஸ்

17 Jun 2019

ஹாங்காங்கில் மீண்டும் எதிர்ப்புப் பேரணி 

ஓமான் கடல்பகுதியில் நேற்று இரு எண்ணெய் கப்பல்களில் குண்டு வைக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

14 Jun 2019

எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக வெளிவந்த காணொளி