2018ல் சிங்கப்பூர் குடும்பங்களின் வருமானம் கூடியது

கடந்த ஆண்டில் வேலை மூலம் சிங்கப்பூர்க் குடும்பங்கள் ஈட்டிய வருமானம் அதிகரித்தது.
குறிப்பாக 71 முதல் 90 சதமானங் களுக்குள் வரும் குடும்பங்களில், ஒவ் வொரு குடும்ப உறுப்பினரின் உண்மை யான வருமானம் 4% உயர்வு கண்டது.
கடைசி 70 சதமானங்களில் உள்ள குடும்பங்களின் ஆள் கணக்கு வரு மான உயர்வு 2.5 முதல் 3.4 விழுக்காட்டிற்கு இடைப்பட்டு இருந்தது என்றும் மேல்நிலையில் உள்ள பத்து விழுக்காட்டுக் குடும்பங்களில் இந்த விகிதம் 2.3 விழுக்காடாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.
புள்ளிவிவரத் துறை நேற்று வெளி யிட்ட வருடாந்திர முக்கிய குடும்ப வருமானப் போக்குகள் அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசியைக் குடும்பத் தலைவராகக் கொண்ட, குறைந்தபட்சம் ஒருவரேனும் வேலைக் குச் சென்று வருவாய் ஈட்டும் குடும்பங் களின் மாதாந்திர இடைநிலை வருமா னம் சென்ற ஆண்டில் $9,293ஆக அதிகரித்தது. 
முந்தைய 2017ஆம் ஆண்டில் இது $9,203ஆக இருந்தது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

படம்: தி நியூ பேப்பர்

19 Mar 2019

சாலைப் பணிகளுக்கு புதிய விதிமுறைகள்

பயங்கரவாதத் தாக்குதலில் தப்பியவர்களையும் மாண்டோரின் குடும்பத்தாரையும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் சந்தித்து ஆறுதல் கூறினார். படம்: இபிஏ

17 Mar 2019

ஆஸ்திரேலியர் மீது கொலைக் குற்றச்சாட்டு