மோடி: பயங்கரவாதிகள் பெரும் விலைகொடுக்க நேரிடும்

ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகருக்கு வெளியே புல்வாமா என்ற இடத்தில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் போலிஸ் படையினர் மீது நடத்தப் பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக் குப் பாகிஸ்தான் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக எச்சரித்து இருக்கிறார். 
அந்தத் தாக்குதலில் 44 வீரர்கள் கொல்லப்பட்டுவிட்டதை அறிந்து மக்களின் ரத்தம் கொதிக் கிறது என்றும் அதற்குப் பதிலடி நடவடிக்கை எடுக்க ராணுவத் திற்கு முழு சுதந்திரம் அளிக் கப்பட்டு இருக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். 
புல்வாமா தாக்குதல் போன்ற செயல்களை அரங்கேற்றி அதன் மூலம் இந்தியாவைப் பாகிஸ்தான் பலவீனப்படுத்திவிட முடியாது என்று திரு மோடி குறிப்பிட்டார். 
டெல்லியிலிருந்து வாரணாசி செல்லும் விரைவு ரயிலைக் கொடி அசைத்து தொடங்கிவைத்த திரு மோடி, அப்போது புல்வாமா தாக்கு தல் பற்றி கருத்துரைத்தார். 
புல்வாமா சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு தொடர்பான அமைச் சரவைக் குழு கூடியது. 
அந்தக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பாகிஸ்தானுக்கு வழங்கப் பட்டு வந்த மிகவும் அனுகூலமான நாடு என்ற தகுதி மீட்டுக் கொள் ளப்படுவதாகவும் அந்த நாட்டை அனைத்துலக ரீதியில் ஒதுக்கி வைப்பதற்கான ஒரு திட்டம் தொடர்பில் இந்தியா செயல்பட்டு வருவதாகவும் கூறினார். 
என்றாலும் புல்வாமா தாக்கு தலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றது பாகிஸ்தான்.  
புல்வாமா தாக்குதலை அமெ ரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் கண்டித்து உள்ளன. பயங்கரவாதி களுக்குப் புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா குரல் கொடுத்தது.
இதனிடையே, சிங்கப்பூர் வெளி யுறவு அமைச்சர் டாக்டர் விவி யன் பாலகிருஷ்ணன், இந்தியா வின் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அனுதாபக் கடிதம் ஒன்றை அனுப்பினார். 
அதில், புல்வாமா தாக்குதல் கேள்விப்பட்டு தான் கவலை அடை வதாகவும் அந்தத் தாக்குதலில் பலியானவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் தான் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் குறிப் பிட்டு இருக்கிறார். 
இந்தப் பயங்கரவாதத் தாக்கு தலைக் கண்டித்து காஷ்மீர் பகுதி யில் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

ஸ்ரீநகருக்கு சுமார் 30 கி.மீ. தெற்கே மத்திய ரிசர்வ் போலிஸ் படையைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்ட தாக்குதலில் 44 வீரர்கள் பலியாயினர். அதனைக் கண்டித்து அப்பகுதியில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தினரும் போலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாதக் குழு ஒன்று பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

செயின்ட் அந்தோணியார் தேவாலயத்தில் குண்டு வெடித்ததில் இறந்தவர்களின் எஞ்சிய சடலங்களை காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் எடுத்துச் செல்கின்றனர். படம்: இபிஏ

22 Apr 2019

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு;  207 பேர் உயிரிழப்பு, எழுவர் கைது 

உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைப் பறிகொடுத்த வேதனையில் கொழும்பு மக்கள். படம்: ராய்ட்டர்ஸ்

22 Apr 2019

பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்திய இலங்கை தொடர் குண்டு வெடிப்புகள்

செயிண்ட் அந்தோணியர் தேவாலயத்திற்கு முன்பாக காவல் நிற்கும் பாதுகாப்புப் படையினர். படம்: ராய்ட்டர்ஸ்

21 Apr 2019

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குறைந்தது 189 பலி