துடிப்பான அறிவார்ந்த தேசத்துக்கு வலுவான மின்னிலக்கத் தற்காப்பு

சிங்கப்பூர் ஒரு துடிப்பான அறி வார்ந்த தேசமாவது, குடிமக்க ளுக்கும் நிறுவனங்களுக்கும் மேம் பட்ட அரசாங்க சேவைகளை வழங்குவது, மின்னிலக்க பொரு ளியலில் சிறந்த வேலைகளை உருவாக்குதல் போன்றவை நடை பெற வேண்டுமானால் சிங்கப்பூ ரிடம் வலுவான மின்னிலக்கத் தற்காப்பு இருக்க வேண்டும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மின்னிலக்கத் தளங்களில் ஏற் படும் இணையத் தாக்குதல்கள், இணைய மோசடிகள், வேகமாக பரவிடும் வதந்திகள் போன்ற வற்றை உதாரணமாகச் சுட்டிய அமைச்சர், அதன் காரணமாக சிங்கப்பூரர்களின் மின்னிலக்கத் தயார்நிலை வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் தொழில்நுட்பம் மூலம் வெளிப்படும் அதன் பலன் கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக் கப்படும் என்றும் கூறினார்.
“இந்த முக்கியமான சவாலில் நாம் வெற்றி பெறுகிறோமா தோல்வி அடைகிறோமா என்பது நம்மிடம் எந்த அளவுக்கு வலுவான மின்னிலக்கத் தற்காப்பு உள்ளது என்பதைப் பொறுத்தே அமைந்து உள்ளது,” என்றார் அவர்.
பொருளியல், அரசாங்கம், சமூ கம் ஆகியவற்றில் ஆற்றல்மிக்க தொழில்நுட்பத்தை அளிப்பதுதான் சிங்கப்பூரின் அறிவார்ந்த தேசத் திட்டத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் விவரித்தார்.
பொய்ச் செய்தி பரப்புதலுக்கு உதாரணமாக அமைச்சர், கடந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவைச் சுட்டினார்.
தைப்பூச ஊர்வலத்தின்போது போலிஸ் அதிகாரி ஒருவரையும் இந்து அறக்கட்டளை வாரிய அதி காரி ஒருவரையும் சம்பந்தப்படுத்தி இணையத்தில் பொய்ச் செய்தி ஒன்று பரப்பப்பட்டது. அது தேவை யில்லாத இன, சமயப் பிரச்சி னையை எழுப்பியிருக்கக்கூடும் என்றார் திரு ஈஸ்வரன்.
ஃபோர்ட் கேனிங் கிரீனில் நேற்று நடைபெற்ற முழுமைத் தற் காப்பு தின நிகழ்ச்சியில், மின்னி லக்கத் தற்காப்பு இயக்கத்தைத் தொடங்கி வைத்த திரு ஈஸ்வரன், “பாதுகாப்பான, விழிப்புநிலையிலான, பொறுப்பான இணையத்
தைக் கொண்டிருப்போம்” எனும் கருப்பொருளையும் அதன் சின்னத் தையும் வெளியிட்டார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜுவல் சாங்கியில் உள்ள 'நைக்கி' கடையில் விற்கப்படும் டி-சட்டைகளில் தமிழ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Apr 2019

'சும்மா செஞ்சு முடி' - 'நைக்கி' தமிழ்