உள்ளூர், அனைத்துலகக் குழுக்கள் பங்கேற்ற சிங்கே அணிவகுப்பு 2019  

வருடாந்திர சிங்கே அணிவகுப்பு சீனப் புத்தாண்டு உணர்வையும் அனைத்துலகக் கலைக் குழுக் களின் திறன்களையும் வெளிப் படுத்துவதாக இருக்கும். 
ஆனால், இந்த ஆண்டு சிங் கப்பூரின் 200வது ஆண்டு நிறை வைக் குறிக்கும் வகையில் 270 மீட்டர் நீளம் கொண்ட ஓவியமும் சிங்கே அணிவகுப்பில் கவரும் அம்சமாக இருந்தது. 
எஃப்1 விரைவுக்கார் பந்தயம் தொடங்கி, முடியும் கட்டட வளா கத்தில் நேற்று முன்தினம் தொடங் கிய இரண்டு நாள் அணிவகுப்பில் 50 குழுக்கள் பங்கேற்றன.
உள்ளூர், தென் கொரியா, கம்போடியா, சீனா, இந்தோனீசியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அனைத்துலகக் கலைக் குழுக்களின் 6,500 படைப்பாளர்
கள் பார்ப்போரைப் பரவசப்படுத் தினார்கள். 
அமைச்சரவை உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோருடன் பிரதமர் லீ சியன் லூங்கும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தார். 
நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் அணிவகுப்பில் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந்தி னராகக் கலந்துகொண்டார். 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹோர்ட்பார்க்’ விளையாட்டுப் பூங்காவில் மண்ணிலும் மரத்திலும் விளையாடி மகிழும்  மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் படிக்கும் பாலர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2019

இயற்கையுடன் இணைந்த விளையாட்டுப் பூங்கா

படம்: தி நியூ பேப்பர்

19 Mar 2019

சாலைப் பணிகளுக்கு புதிய விதிமுறைகள்