வரவுசெலவுத் திட்டம் 2019: இருநூற்றாண்டு நிறைவு வெகுமதிகள்

சிங்கப்பூர் தனது இருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடி வரும் நிலையில் சிங்கப்பூரர்களுக்குப் பல வெகுமதிகளை அளிக்கும் திட்டமாக இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்ட அறிக்கை அமைந்து இருக்கிறது. 
ஒரு வலுவான, ஒன்றுபட்ட சிங்கப் பூரை உருவாக்கும் நோக்கில் வளங்களை ஒதுக்கீடு செய்யும் உத்திபூர்வ திட்டமாக அந்த அறிக்கை அமைந்துள்ளது.
சிங்கப்பூரைப் பாதுகாப்பாகவும் பத்திர மாகவும் வைத்திருப்பது, துடிப்புமிக்க, புத்தாக்கமிக்க பொருளியல், பரிவுமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம், சிங்கப்பூரை ஓர் உலக நகராக, அனை வருக்குமான இல்லமாக ஆக்குவது, நீடித்து நிலைக்கும் நிதிவளம் ஆகிய ஐந்து கருப்பொருள்களை மையமாகக் கொண்ட வரவுசெலவுத் திட்ட அறிக் கையை நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இவ்வாண்டு அரசாங்கம் மொத்தம் செலவிடும் தொகையில் 30% தற்காப்பு, பாதுகாப்பு, அரசதந்திர நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்படுகிறது.
தேவை ஏற்பட்டால், சிங்கப்பூரின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் சிங் கப்பூரர்களின் நல்வாழ்விற்காகவும் அர சாங்கம் இன்னும் அதிகம் செலவிடும் என்றார் திரு ஹெங்.
மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த, 60 முதல் 69 வயதுக்குட்பட்ட கிட்டத்தட்ட 500,000 சிங்கப்பூரர்களின் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளைக் குறைக்க உதவும் வகையில் மெர்டேக்கா தலை முறைத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் $6.1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.