பிஞ்சு மனங்களில் பரிவை விதைக்க புத்தகம் மூலம் முயற்சி

குடும்பத்தினர், ஆசிரியர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் என மனிதர்கள் மீதும் விலங்குகள், சுற்றுப்புறம் மீதும் பரிவு காட்ட வேண்டும் என்ற நற்பண்பை பாலர் பருவத்திலேயே விதைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 21 பக்கங்களைக் கொண்ட ‘கேரிங் ஃபார் அதர்ஸ்’ என்ற படப் புத்தகத்தை அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று வெளி யிட்டார். இந்நிகழ்ச்சி ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 65ல் உள்ள என்டியுசி மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளியில் இடம்பெற்றது.
ஆங்கிலம், தமிழ், சீனம், மலாய் என நான்கு மொழிகளிலும் தயா ராகியுள்ள இந்தப் புத்தகம் அடுத்த மாதத்திற்குள் சிங்கப்பூரில் உள்ள அனைத்து மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளிகளுக்கும் விநியோகிக்கப் பட்டுவிடும்.
இந்தப் புத்தகத்திற்கு உருக் கொடுத்ததும் எழுதியதும் அந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரி யர்கள்தான்.
இப்புத்தகம் மூலம் குழந்தை களுக்கு அவர்களது தாய்மொழி யையும் கற்றுக்கொடுக்க முடியும் என்றார் மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பொது மேலாளர் தியன் ஆய் லிங்.
“தங்களைச் சுற்றியிருப்போர் தாய்மொழியை அதிகம் பயன்படுத் தாதபட்சத்தில் இன்றைய குழந் தைகளும் தாய்மொழியறிவைக் குறைவாகப் பெற்றிருக்கலாம். இத்தகைய சூழலில், மொழியறி வையும் பண்புநெறிகளையும் ஒரு சேரக் குழந்தைகளுக்குக் கற்றுத் தர ஆசிரியர்களுக்கும் பெற்றோர் களுக்கும் இந்தப் புத்தகம் பெரி தும் உதவும் என நம்புகிறோம்,” என்றும் அவர் சொன்னார்.