இணைய பாதுகாப்பு பயிற்சிப் பள்ளி; நிபுணர்கள் சேர்ப்பு

சிங்கப்பூரின் இணையப் பாதுகாப் பைத் தீவிரப்படுத்தும் நோக்கில் இணையப் பாதுகாப்பு நிபுணர் களை தற்காப்பு அமைச்சு வேலைக்கு அமர்த்தவுள்ளது. அதற்காக தகுந்த நிபுணர்களைத் தேடும் பணியில் அது இறங்கி யுள்ளது. 
அத்துடன், இணையப் பாது காப்பு பயிற்சிப் பள்ளி ஒன்றையும் அமைச்சு அமைத்துள்ளது. 
அங்கு இணையப் பாதுகாப்பு நிபுணர்களுக்குப் பயிற்சி அளிக் கப்படுவதுடன், தேசிய சேவை யாளர்கள், சிங்கப்பூரின் ராணுவம், ஆயுதப் படைகளில் பணிபுரி வோருக்கு இணைய ஒழுங்கு முறையும் கற்றுத் தரப்படும்.
இணைய சம்பவங்களை எதிர் கொள்வது, கணினிக் கட்டமைப்பு களை மேற்பார்வையிடுவது, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப் பிலும் அதன் செயலிகளிலும் இருக் கக்கூடிய பாதுகாப்புக் குறைபாடு களைக் கண்டறிவது போன்ற சிறப்பு நடவடிக்கைளைக் கையாள் வதற்காக 300 பேரை புதிதாக அமைச்சு பணியில் சேர்க்கவுள்ளது. 
தற்காப்பில் சமூக உறவுகள் பற்றிய ஆலோசனை மன்றத்தின் கருத்தரங்கில் இந்த அறிவிப்பு களை தற்காப்புக்கான மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் நேற்று ஸ்டேக்மண்ட் முகாமில் நேற்று வெளியிட்டார்.
இந்தத் திட்டங்களும் புதிய இணையத் தற்காப்புப் பள்ளியும் இணைய மிரட்டல்களை இன்னும் சிறப்பாகத் தற்காக்க சிங்கப்பூருக்கு உதவும்.
நவீனமயமாகி வரும் இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இரு திட்டங்கள் வகுக்கப்பட வுள்ளன. 
இதில், ராணுவ நிபுணத்துவத் திட்டத்தின்கீழ் தளபத்தியம், கட்டுப்பாடு, தொடர்பு, கணினி நிபுணத்துவக் கல்வித்திட்டம் ஆகியவை வரும்.