பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த நடவடிக்கை

சிங்கப்பூர் பீரங்கிப்படையின் 295வது படை கடைப்பிடிக்கும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தலைமை ஆய்வாளர் டான் சீ வீயிடம் (நீலச் சீருடை) விளக்கமளிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் முதல் தலைமை ஆய்வாளராக பிரிகேடியர் ஜெனரல் டான் சீ வீ நியமிக்கப்பட்டுள்ளார். அண்மை யில் ராணுவப் பயிற்சிகளின்போது சிலர் மரணம் அடைந்ததை அடுத்து, பயிற்சிகளின்போது பாதுகாப்பு அம்சங்கள் கடைப் பிடிக்கப்படுவதைக் கண்காணிக்க தலைமை ஆய்வாளர் நியமிக்கப் பட்டுள்ளார்.
கூட்டுப்படையின் செயலாக்கப் பிரிவின் இயக்குநராகப் பதவி வகிக்கும் பிரிகேடியர் டான், வரும் புதன்கிழமையிலிருந்து கூட்டுப் படையின் தலைமை அதிகாரியாக வும் செயல்படுவார்.
ராணுவப் பயிற்சிகளின்போது ஏற்படும் பாதுகாப்புக் குறைபாடு களை அடையாளம் காண்பது ராணுவ அதிகாரிகளுக்கு இயல் பான காரியமாக்குவதே தமது இலக்கு என்றார் பிரிகேடியர் டான். பிரிகேடியர் டானுடனான பேட்டியின் பிரதியைத் தற்காப்பு அமைச்சு நேற்று ஊடகத்துக்கு அனுப்பி வைத்தது. ஆயுதப் படைகளின் அனைத்துப் பிரிவு களுக்கும் சென்று அங்கிருக்கும் புகார் செய்யும் முறை, பாதுகாப்பு தொடர்பான பழக்கவழக்கங்கள், பாதுகாப்புக் கண்காணிப்பு முறை கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்கு பிரிகேடியர் டான் உடனடி முன்னுரிமை கொடுக்கப் போவதாகப் அவரது பேட்டியின் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்தக் கண்டுபிடிப்புகளைக் கொண்டு சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் பாதுகாப்பு நிர்வா கத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பு தொடர்பான பழக்கவழக்கங்களை வலுப்படுத்தவும் தற்காப்புப் படைத் தலைவரிடம் நான் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பேன்.  
“பாதுகாப்பு தொடர்பில் புகார் செய்வது வழக்கமானதொன்றாக இருக்க வேண்டும். இதனால் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பயம் இல்லாமல் ராணுவ வீரர்களும் தளபதிகளும் புகார் செய்வர்,” என்று பிரிகேடியர் ஜெனரல் டான் தெரிவித்தார்.
புகார் செய்வதை மேம்படுத் துவது தொடர்பாக தீவிர நடவடிக் கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் பாதுகாப்பு கண்காணிப்புகளின் தரத்தையும் பாதுகாப்பு தொடர்பான பழக்கவழக்கங்களையும் வலுப் படுத்துவதை  இது உறுதி செய்யும் என்று பிரிகேடியர் ஜெனரல் டான் கூறினார். 
பயிற்சிகளின்போது மரணங் கள் நிகழாதிருப்பதே இலக்கு என்றார் அவர்.
“சிங்கப்பூரைத் தற்காக்க சிறப்பான செயல்பாட்டை நிலை நாட்ட சிங்கப்பூர் ஆயுதப் படை களின் போர் பிரிவுகள் முனைப் புடன் இருக்கும் அதே வேளையில் உயர்தர பாதுகாப்பு அணுகுமுறை களையும் அவை கடைப்பிடிக்க வேண்டும்,” என்றார் அவர்.
“ஆயுதப் படைகளில் பாது காப்புக் கண்காணிப்பு முறை தொடர்பாக எனது அலுவலகம் சுயேச்சை மதிப்பீடுகளைச் செய் யும். 
“ஒவ்வொரு பிரிவின் பாதுகாப்பு அம்சங்களுக்குக் கடுமையான அளவுகோல் கடைப்பிடிக்கப்படு வதை இது உறுதி செய்யும்,” என்று பிரிகேடியர் ஜெனரல் டான் தெரிவித்தார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹோர்ட்பார்க்’ விளையாட்டுப் பூங்காவில் மண்ணிலும் மரத்திலும் விளையாடி மகிழும்  மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் படிக்கும் பாலர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2019

இயற்கையுடன் இணைந்த விளையாட்டுப் பூங்கா

படம்: தி நியூ பேப்பர்

19 Mar 2019

சாலைப் பணிகளுக்கு புதிய விதிமுறைகள்