சாலை அணிவகுப்பில் கலை நிகழ்ச்சிகள்: ஆர்வத்துடன் திரண்ட குடியிருப்பாளர்கள்

சீனப் புத்தாண்டுக் கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாக அங் மோ கியோ=ஹவ்காங் குடிமக் கள் ஆலோசனைக் குழு நேற்று சாலை அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஹவ்காங் அவென்யூ 9ல் நேற்று மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் சமூ கத்தையும் பள்ளிக்கூடங் களையும் சேர்ந்த கலைப் படைப் பாளர்கள் கலந்துகொண்டனர். 
கிட்டத்தட்ட 3,000 குடியிருப் பாளர்களைக் கவரும் நோக்கில் நடத்தப்பட்ட நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பிரதமர் லீ சியன் லூங் கலந்துகொண்டார்.
முச்சக்கர வண்டியில் அமர்ந்து சாலை அணிவகுப்பில் சென்றார். சாலை ஒரம் திரண் டிருந்த குடியிருப்பாளர்கள் அவரை நோக்கி உற்சாகமாகக் கையசைத்தனர்.

இரண்டரை மணி நேர சாலைக் கொண்டாட்டத்தில் சுமார் 500 கலைஞர்கள் கலந்து கொண்டு 20 விதமான படைப்பு களை வழங்கினர். எல்லா வயதுப் பிரிவினரும் இதில் பங் கேற்றனர். கராத்தே குழுவினர், சீன கலாசார நடனக் குழுவினர் கலைப் படைப்பாளர்களில் அடங் குவர்.
சீனப் புத்தாண்டின் தொடர் பில் சாலை அணிவகுப்பு நடத் தும் வழக்கம் அங் மோ கியோ =ஹவ்காங் தொகுதியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இவ் வாண்டு அதற்கு ஆதரவு அதி கரித்துள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணம் செய்த பிரதமர் லீ சியன் லூங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடிய சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம். இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினார் அப்பல்கலைக்கழகத்தின் லீ குவான் இயூ பொதுக் கொள்கை ஆய்வுப் பள்ளியினுடைய கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளரான டாக்டர் சித்ரா ராஜாராம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Aug 2019

‘அக்கறைக்குரியதாக நீடிக்கும் இனவாதம்’