லங்காவி பயணப் படகில் தீ:  52 பேர் உயிருடன் மீட்பு

லங்காவியில் தீப்பற்றிய படகிலிருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திர மாக மீட்கப்பட்டுள்ளனர். 
குவா படகு முனையிலிருந்து நேற்றுக் காலை கோலா பெர்லிஸ் நோக்கிப் புறப்பட்ட சில நிமிடங்களில்  ‘டிராகன் ஸ்டார்’ என்னும் அந்தப் பயணப் படகில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.  
அப்போது அதில் 52 பயணிகள் இருந்தனர். குவாவிலிருந்து கிட்டத் தட்ட மூன்று கிலோ மீட்டர் தொலை வில் கடற்பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. உடனடியாக அருகிலிருந்த சிறு படகுகள் மீட்புப் பணிக்கு விரைந் தன. அனைத்துப் பயணிகளும் காய மின்றி மீட்கப்பட்டதாகத் தெரிகிறது.
தீப்பிடித்து எரிவதை பயணி ஒருவர் முதலில் கண்டறிந்து கூக்குரல் எழுப்பியதாக தீயணைப்பு, மீட்புத்துறை தெரிவித்தது. தீ தொடர்ந்து எரிவதைக் கண்ட சில பயணிகள் உயிர்தப்பிக்கும் நோக் குடன் கடலுக்குள் குதித்தனர்.
அவர்களை மீட்க லங்காவி தீயணைப்பு, மீட்பு நிலையங்களைச் சேர்ந்தோரும் உதவினர். மீட்புப்பணிக் காக மலேசிய கடற்துறை அமலாக்க முகவை மூன்று படகுகள் அனுப்பப் பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவற் றில் சென்ற தீயணைப்பாளர்கள் பயணப் படகிலிருந்த தீயை முற்றாக அணைத்தனர். மீட்கப்பட்டோர் தவிர வேறு யாரும் அந்தப் படகில் சிக்கி யிருக்கவில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடிய சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம். இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினார் அப்பல்கலைக்கழகத்தின் லீ குவான் இயூ பொதுக் கொள்கை ஆய்வுப் பள்ளியினுடைய கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளரான டாக்டர் சித்ரா ராஜாராம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Aug 2019

‘அக்கறைக்குரியதாக நீடிக்கும் இனவாதம்’