அதிபர் ஹலிமா: மனநலப் பிரச்சினை பற்றிப் பேச பயப்படவேண்டாம்

மனநலம் தொடர்பான விழிப்பு உணர்வை அதிகரிப்பதும் அதற்கு ஆதரவளிப்பதும் இந்த ஆண்டின் அதிபர் சவாலின் கருப்பொருளாக உள்ளது. 
அதனை வலியுறுத்தி, ஆதரவு அளிக்கும் நோக்கில் அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று உட் லண்ட்சில் இருக்கும் சிங்கப்பூர் மனநல சங்கத்தின் (எஸ்ஏஎம்எச்) Creative SAY! நிலையத்தில் நடைபெற்ற நாடக நிகழ்ச்சியின் பார்வையாளரானார். 
இந்த நிலையத்தில் வாரம் ஒரு முறை நாடக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துகிறார் 17 வயதுத் தொண்டூழியர் ஜேமீ வோங். சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல் லூரியின் மாணவரான அவர், தமது பள்ளித் தோழர்கள் இரு வருடன் சேர்ந்து நேற்று நாடகம் ஒன்றை நடத்தினார். 

மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதைவிட அவர்களுக்கு உதவ முற்படலாம் என்றார் திருவாட்டி வோங்.
“மனநலப் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் அணுக வேண்டும். அதில் சமூகத்துக்கு பெரும்பங்கு உள்ளது,” என்று இளையர்கள் மத்தியில் குறிப்பிட்ட அதிபர் ஹலிமா, “மனநலப் பிரச்சினை பற்றிய அறியாமை நிறைந்திருக்கிறது. மனநலம் பற்றி உரையாட பயப்படாதீர்கள்,” என்றார்.
உட்லண்ட்சில் அமைந்துள்ள அந்த நிலையம் மனநலத்தை வலியுறுத்துவதுடன் இளையர்களி டையே மனநலப் பிரச்சினைகளைத் தடுக்கும் நோக்கில் அவர்களுக் கான விளையாட்டு, வெளிப்புற, கலை தொடர்பான நடவடிக்கை களை நடத்துகிறது. கலைப் பயிலரங்குகள், நடன வகுப்புகள், விளையாட்டுகள், படகோட்டுதல் போன்ற இந்த நிலையத்தின் நிகழ்ச்சிகளில் 12 முதல் 35 வய துக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.

 

.ST PHOTO: ONG WEE JIN