இம்ரான்: அபிநந்தன் இன்று விடுவிப்பு

தன் பிடியில் இருக்கும் விமானி அபிநந்தனை அமைதிக்கு அடை யாளமாக இன்று பாகிஸ்தான் விடுவித்துவிடும் என்று அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் நேற்று நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
எல்லைப் பகுதியில் ராணு வத்தை இந்தியா மீட்டுக்கொண் டால் அந்த விமானியை விடுவிக் கத் தயார் என்று முன்னதாக பாகிஸ்தான் தெரிவித்து இருந்தது.
ஆனால் விமானி அபிநந்தனை உடனடியாக எந்தவொரு நிபந் தனையும் இல்லாமல் விடுவிக்க வேண்டுமென இந்தியா கோரியது.
இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் பிரதமரின் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. மிரட்டல் சூழ் நிலையை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என்று இந்தியாவிடத்திலும் பிரதமர் நரேந்திர மோடியிட மும் தான் வேண்டுகோள் விடுப்பதாகக் குறிப்பிட்ட இம்ரான் கான், பிரதமர் மோடியுடன் தான் பேச முயன்றதாகவும் கூறினார்.
இவ்வேளையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் குறைவதற்குப் பதிலாக நேற்று மேலும் கூடியதாகவே தகவல்கள் தெரிவித்தன.
இந்திய எல்லைக்குள் நேற்றும் பாகிஸ்தான் அத்துமீறி நுழைந்து 24 விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் அதை இந்தியா வின் 8 விமானங்கள் வெற்றி கரமான முறையில் முறியடித்ததாக வும் தகவல்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, இந்தியாவுட னான தனது எல்லை அருகே இருக்கும் பல கிராமங்களிலிருந்து மக்களை பாகிஸ்தான் அரசாங்கம் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வதாகவும் எல்லைப் பகுதி களில் பள்ளிக்கூடங்கள் மூடப் பட்டதாகவும் தகவல்கள் கூறின.
இந்தியாவுடன் கூடிய சம்ஜவுதா என்ற ரயில் சேவையை பாகிஸ்தான் நேற்று திடீரென நிறுத்திவிட்டது.
இந்தியாவின் வளரச்சியைத் தடுக்க முயலும் எதிரிகளை ஒரே நாடாகச் சேர்ந்து இந்தியா வீழ்த் தும் என்று பிரதமர் மோடி தன் கட்சித் தொண்டர்களிடம் ஆற்றிய காணொளி உரையில் கூறினார்.

பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரில் இருக்கும் எல்லைப் புற கிராமங்களை பாகிஸ்தான் காலி செய்கிறது. சக்கோத்தி என்ற ஊர் மக்கள் வாகனங்களில் வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள்.
படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!