‘தேக்கா பிளேஸ்’ கட்டுமானப் பணியின் இறுதிக்கட்டம்

லிட்டில் இந்தியாவில் அமைய இருக்கும் 'தேக்கா பிளேஸ்' கட்டடம் நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் கலா சார, மரபுடைமை அம்சங்களுக்கும் அங்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டு உள்ளது என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களின் மாறி வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடைத்தொகுதிகள் புதிய தொழிநுட்பத்தைத் தழுவவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இக்கட்டடக் கட்டுமானப் பணிகளின் இறுதிக்கட்டத்தை குறிக்கும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் ஈஸ்வரன், எதிர்காலத்திற்கு ஏற்ற கடைத்தொகுதிகளை அமைப்பது குறித்து பேசினார்.
மெய்நிகர் தொழில்நுட்பம், ஒருங்கிணைந்த விற்பனைத்தளம் ஆகியவை சில்லறை வர்த்தகத்தை மேம்படுத்துவதோடு வாடிக்கை யாளர் உறவை வலுப்படுத்தவும் உதவும் என்று அவர் சுட்டினார்.
ஒருங்கிணைந்த வளாகமாக உருவாகிவரும் 'தேக்கா பிளேஸ்' இவ்வாண்டின் இறுதிக்குள் திறக் கப்படவுள்ளது.

லிட்டில் இந்தியா வட்டாரத்தின் மரபுடைமையைக் கட்டிக்காக்கும் வகையில் இந்தக் கடைத்தொகுதி அமையும் என்று தாம் நம்புவதாக அமைச்சர் ஈஸ்வரன் சொன்னார்.
இக்கடைத்தொகுதியில் கிட்டத் தட்ட பாதியளவு இடம் வாடகைக்கு விடப்பட ஒப்பந்தம் நிறைவேறி உள்ளது அல்லது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவ தாக அதன் மேம்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
‘லம் சாங் ஹோல்டிங்ஸ்’ மற்றும் ‘லாசால் இன்வெஸ்ட்மண்ட் மேனேஜ்மண்ட்’ ஆகிய இரு நிறு வனங்கள் இந்தக் கட்டடத்தின் மேம்பாட்டாளர்கள்.
முன்னர் ‘தி வெர்ஜ்’ கட்டடம் இருந்த இடத்தில் அமைய உள்ள ‘தேக்கா பிளேசின்’ பிரதான கட்டடம் 10 மாடிகளைக் கொண் டது. அதன் துணைக் கட்டடம் ஏழு மாடிகளைக் கொண்டது.
இக்கட்டடத்தில் 320 வீடுகளும் 70,000 சதுர அடி பரப்பளவில் 80 கடைகளும் அமையும் வசதி உள்ளது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜாலான் புரோவில் நிகழ்ந்த மாபெரும் எரிவாயுத் தோம்பு தீச்சம்ப வத்தை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைப்புத் தளபதிகளாகச் செயல்பட்ட கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி (இடது), மேஜர் நவின் பாலகிருஸ்ணன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Jun 2019

சவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பாளர்கள்