கான்கிரீட் தூண் சரிந்தது; கட்டுமான ஊழியர் காயம்

குவீன்ஸ்டவுனில் உள்ள எண் 132 மார்கரெட் டிரைவ் கட்டு மானத் தளத்தில் நேற்று மாலை ஒரு பெரிய கான்கிரீட் தூண் கட்டடத்தில் உயரத்திலிருந்து விழுந்தது.
அதில் கட்டுமான ஊழியர் ஒருவர் காயமடைந்து மருத்துவம னைக்குக் கொண்டு செல்லப்பட் டுள்ளார். 
இச்சம்பவம் குறித்து தங்க ளுக்கு மாலை 4.35 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத் தில் தெரிவித்தது.
கட்டுமானப் பணிகள் நடந்த பலமாடி கார் நிறுத்துமிடக் கட்ட டத்தின் உயரத்தில் இருந்து அந் தப் பெரிய கான்கிரீட் தூண் கட் டடத்தின் கீழே விழுந்தது.
அதனால் கட்டுமான ஊழியர் ஒருவரின் தலையில் காயம் ஏற் பட்டது என்றும் அவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட் டார் என்றும் கட்டுமானத் தளத் தில் வேறு எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் குடிஐமத் தற்காப்புப் படை கூறியது.