உடல்நலன்: அரசாங்க உதவியுடன் சொந்த அக்கறையும் அவசியம்

நீ சூன் சுகாதார விழாவில் கலந்து கொண்ட பலரும் பல மனநல, உடல்நல நடவடிக்கை களில் ஈடு பட்டனர். உடல்நலன் பற்றிய பயனுள்ள தகவல் களைத் தெரிந்து கொண்டனர். உடல்நல சோதனை களைச் செய்து கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“சிங்கப்பூரில் மக்களின் சுகாதாரப் பராமரிப்பிற்காக ஆண்டுதோறும் அர சாங்கம் $10 பில்லியனுக்கும் அதிக  தொகையைச்  செலவிட்டு வருகிறது. பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களுக்கு அது உதவி வருகிறது.
“இருந்தாலும் உடல்நலனில் மக்க ளும் அக்கறைகொண்டு நாட்டத்துடன் செயல்படவேண்டும்,” என்று சட்ட, உள் துறை அமைச்சர் கா.சண்முகம் வலி யுறுத்தியுள்ளார். ஈசூன் வட்டாரத்தில் நடந்த நீ சூன் சுகாதார விழாவில் இதர பேராளர்களுடன் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டார். 

முன்னோடித் தலைமுறைத் திட்டம், அண்மையில் வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்ற மெர்டேக்கா தலைமுறைத் திட்டம் முதலான பலவற்றையும் அமைச் சர் சுட்டிக்காட்டினார். 

“உடல்நலன் பேணுவதில் அவரவர் பங்கு முக்கியம்.   உடல்நலனை மேம் படுத்திக்கொள்ள என்ன என்ன செய்ய முடியும் என்று நமக்கு நாமே கேட்டுக் கொள்வது அவசியம். சில ஆலோசனை களைக் கடைப்பிடிக்கலாம். சாப்பாடு எப்படி இருக்கவேண்டும், எந்த வகையில் உடற்பயிற்சி செய்யமுடியும், என்று சில மாற்றங்களைச் செய்து உடல்நலனை மேம்படுத்தலாம். 

“சிங்கப்பூரில் நாம் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறோம். அந்த வாழ்க்கை நல்ல விதமாக, மகிழ்ச்சியாக இருக்க இது உதவும்,” என்றார் அமைச்சர் சண்முகம்.