இறந்த எலி: அரிசி பாக்கெட்டுகளை அகற்றியது ஷெங் சியோங் பேரங்காடி

பாசுமதி அரிசி பாக்கெட் ஒன்றில் எலி இறந்து கிடந்தது வாடிக் கையாளர் ஒருவரால் காணப்பட் டதைத் தொடர்ந்து ஷெங் சியோங் பேரங்காடி அந்த வகை அரிசியை தமது கடையிலிருந்து அகற்றிவிட் டது.
விக்னேஷ் ஜோதிமணி என் னும் அந்த வாடிக்கையாளர் பிடோக் ரெசர்வாயர் ரோட்டில் உள்ள ஷெங் சியோங் கடையில் கடந்த சனிக் கிழமை அந்த அரிசி பாக்கெட்டை வாங்கியதாகவும் அப்போது அந்த பாக்கெட்டினுள் இறந்த எலி கிடந் ததைக் கண்டு தாம் அதிர்ச்சியுற்ற தாகவும் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
அதனைப் படமாக எடுத்து தமது பேஸ்புக்கில் அவர் இணைத் துள்ளார்.
இது குறித்து வேளாண் உணவு கால்நடை மருத்துவ ஆணையத்தி டமும் ஷெங் சியோங் நிர்வாகத்திட மும் தாம் புகார் அளித்திருப்பதாக வும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஃபேஸ்புக் பதிவு நேற்று முற்பகல் வரை 3,100க்கு மேற்பட்ட முறை பகிரப்பட்டது.
வாடிக்கையாளர் கடந்த சனிக் கிழமை தங்களிடம் புகார் அளித் ததை ஷெங் சியோங் பேரங்காடி பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் நேற்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஹவுஸ் பிராண்ட் பாசுமதி அரிசியை தமது பேரங்காடியின் அனைத்து கிளை களிலிருந்தும் அகற்றிவிட்டதாக வும் இது குறித்து அந்த அரிசியை விநியோகம் செய்தவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் பேச்சா ளர் தெரிவித்தார்.

விக்னேஷ் ஜோதிமணி என்னும் வாடிக்கையாளர் தமது ஃபேஸ்புக்கில் பதிவேற்றியுள்ள படங்கள். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடிய சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம். இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினார் அப்பல்கலைக்கழகத்தின் லீ குவான் இயூ பொதுக் கொள்கை ஆய்வுப் பள்ளியினுடைய கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளரான டாக்டர் சித்ரா ராஜாராம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Aug 2019

‘அக்கறைக்குரியதாக நீடிக்கும் இனவாதம்’