2024ஆம் ஆண்டு முதல் பாட அடிப்படையில் தரம் பிரிப்பு

உயர்நிலைப் பள்ளிகளில் சேரும் போது விரைவுநிலை, வழக்க நிலை (ஏட்டுக்கல்வி), வழக்க நிலை (தொழில்நுட்பம்) என தொடக்கப் பள்ளி ஆண்டிறுதித் தேர்வு (பிஎஸ்எல்இ) முடிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் தரம் பிரிக்கப்படும் முறை ஒழிக் கப்படும் என கல்வி அமைச்சர் ஓங் யி காங் அறிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக, பாட அடிப் படையில் மாணவர்கள் தரம் பிரிக்கப்படுவர். இந்தப் புதிய முறை 2024ஆம் ஆண்டில் நடப்பிற்கு வரும்.
அம்முறையின்கீழ், ஒவ்வொரு பாடமும் ஜி1, ஜி2, ஜி3 என்ற மூன்று நிலைகளில் இருக்கும். மாணவர்கள் தங்களது திற மைக்கு ஏற்றபடி அதில் ஏதேனும் ஒரு நிலையைத் தேர்வு செய்து படிக்கலாம். இதில் ‘ஜி’ என்பது ‘ஜெனரல் (பொது)’ என்பதைக் குறிக்கும். ஜி1 என்பது இப் போதுள்ள வழக்கநிலை (தொழில் நுட்பம்) தரத்திற்கு நிகரானது. அதேபோல, ஜி2 என்பது வழக்க நிலை (ஏட்டுக்கல்வி), ஜி3 என்பது விரைவுநிலை ஆகிய வற்றுக்கு ஒப்பானது.
முதற்கட்டமாக அடுத்தாண்டு 25 உயர்நிலைப் பள்ளிகளில் இந்தப் பாட அடிப்படையிலான தரம் பிரிப்பு முறை தொடங்கப் படும். பின்னர் படிப்படியாக அம் முறை மற்ற உயர்நிலைப் பள்ளி களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் 2024ஆம் ஆண்டில் எல்லாப் பள்ளிகளும் இந்த முறைக்கு மாறிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.2019-03-06 06:00:00 +0800