தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்: இந்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் செயற்கைக்கோள் படம்

பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் பயிற்சி முகாம்களை விமானத் தாக்குதல் மூலம் தகர்த்துவிட்ட தாகவும் நூற்றுக்கும் மேற்பட் டோரைக் கொன்றுவிட்டதாகவும் இந்திய விமானப் படை தெரிவித்து வரும் வேளையில் அந்த அறிவிப்பு குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும் செயற்கைக்கோள் படம் ஒன்றை ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

பாகிஸ்தானின் கேபிகே என் றழைக்கப்படும் கைபர் பக்துங்வா மாநிலத்தில் உள்ள பாலாக்கோட் நகரிலும் ஜாபா கிராமத்தின் அரு கிலும் ஜெய்ஷ்-இ-முகம்மது நடத்திவரும் மதரஸா என்னும் சமயப் பள்ளிகளின் ஆறு கட்டடங் களும் எவ்வித சேதமுமின்றித் தோற்றமளிப்பதை அந்தப் படம் தெளிவாகக் காட்டுகிறது.

அமெரிக்காவின் சான்பிரா சிஸ்கோ நகரைச் சேர்ந்த ‘பிளா னெட் லேப்ஸ்’ என்னும் தனியார் செயற்கைக்கோள் ஆய்வு நிறு வனம் இந்தப் படத்தை கடந்த திங்களன்று எடுத்ததாகக் கூறி வெளியிட்டுள்ளது. அதாவது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்திய ஆறு நாட்களுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட படம் இது என அந்நிறுவனம் தெரிவித்துள் ளது. 
அழித்துவிட்டதாகக் கூறப் படும் இடங்களில் அமைந்துள்ள சமயப் பள்ளிக்  கட்டடங்களில் கண்ணுக்குப் புலப்படக்கூடிய துவா ரங்களோ எரிந்ததற்கான அடை யாளமோ இல்லாமல் கட்டடங்கள் நல்ல நிலையில் இருப்பதைப் படம் காட்டுகிறது.

மேலும் அவற்றின் சுவர்களி லும் சேதமில்லை. மதரஸாவைச் சுற்றிய பகுதிகளில் வான்படைத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான எந்த ஓர் அறிகுறியும் இல்லை என்றும் அப்பகுதிகளில் உள்ள மரங்களுக்குக்கூட சேதமில்லை என்றும் விளக்கும் அந்தப் படம் 2018 ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட படத்தோடு ஒத்திருப்பதாக நிறுவனம் கூறியது.
தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாகச் சொல்லி வரும் இந்திய அரசாங் கத்திற்கு இந்த செயற்கைக்கோள் படம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக ‘ராய்ட்டர்ஸ்’ தெரி விக்கிறது.
மேலும், இந்தப் படத்தை மின் னஞ்சலில் அனுப்பி கருத்து கேட் டதற்கு இந்தியாவின் வெளியுறவு அமைச்சும் தற்காப்பு அமைச்சும் எந்தவொரு பதிலை யும் அளிக்கவில்லை என்றும் ‘ராய்ட்டர்ஸ்’ கூறியுள்ளது.

பாகிஸ்-தான் எல்லையோரம் உள்ள சமயப் பள்ளி கட்டடங்கள். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்