ஜுவல் சாங்கி கடைத்தொகுதி ஏப்ரல் 17ஆம் தேதி திறப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜுவல் சாங்கி கடைத்தொகுதி இந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதியன்று உலகிற்குத் தனது கதவுகளைத் திறந்துவிடவிருக்கிறது.
அதற்கு முன்பாக, பத்து தளங் களில் 280 கடைகளையும் உணவு, பான நிலையங்களையும் கொண் டுள்ள அந்தக் கடைத்தொகுதியை சிங்கப்பூர்வாசிகள் கண்டுகளிக் கும் விதமாக ஏப்ரல் 11 முதல் 16 வரை முன்னோட்டக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
அந்த நாட்களில் ஜுவல் சாங்கி கடைத்தொகுதியைக் காண விரும்புவோர் jewelpreview.com என்ற இணையத்தளம் வழி யாக முன்பதிவு செய்யவேண்டும். இம் மாதம் 12ஆம் தேதி காலை 6 மணியில் இருந்து முன்பதிவு தொடங்கும்.
மொத்தம் 500,000 இலவச நுழைவுச்சீட்டுகள் இருப்பதாக சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது. அந்த ஐந்து நாட்களிலும் காலை பத்து மணி முதல் இரவு வரை, தலா நான்கு மணி நேரம் என மூன்று கட்டங் களாக பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நான்கு சிங்கப்பூரர்கள் மாண்ட இந்த விபத்திற்குக் காரணமான பி.மணிக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (படம்: மலேசிய போலிசார்)

19 Jul 2019

சிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை

'செத்தொழியுங்கள்' என்று ஜப்பானிய மொழியில் கத்தியபடி ஆடவர் ஒருவர் தீப்பற்றக்கூடிய திரவத்தைக் கட்டடத்தினுள் ஊற்றியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

19 Jul 2019

ஜப்பான்: கட்டடத்திற்குத் தீ வைப்பு; 33 பேர் உயிரிழப்பு, மேலும் பலர் காயம்