நாட்டின் எதிர்கால செயல் திட்டத்தில் இளையர் பங்கு

சாமர்செட் பகுதியில் இளையர்கள் அதிகம் பயன்படுத்தும் ‘ஸ்கேப்’ வளாகம், இளையர் மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் எதிர்காலத்தை வடிவ மைக்கும் அதிக பொறுப்பு நாட்டின் இளையர்களுக்கு வழங்கப்படும். அதற்கு வழிவகுக்கும் புதிய திட் டத்தின் மூலம் இளையர்கள் பொதுவான அக்கறைக்குரிய விவ காரங்களையும் அதற்கான தீர்வு களையும் தெரிவிக்கவும் வாய்ப்பு கிட்டும்.
வரும் 2025ஆம் ஆண்டுக்கான இளையர் இலக்கை வகுக்கவும் அதை அடைவதற்கான செயல் திட்டத்தை உருவாக்கவும் ஒரு குழு அமைக்கப்படும் என்று கலா சார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரி வித்தார். 
15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இளையர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 
பல்வேறு துறைகளிலும் அமைப் புகளிலும் உள்ள இளையர் தலை வர்கள் எஸ்ஜி இளையர் செயல் திட்டத்தை உருவாக்க இளையர் களைச் சந்தித்து கருத்துகளைப் பெறுவர்.
அந்தச் செயல்திட்டம், வேலை கள், வேலை வாய்ப்பு முதல் மன நலம் வரை முன்னுரிமை கொடுக் கப்பட வேண்டிய அம்சங்களை அடையாளம் காணும் என்றார் திருவாட்டி சிம் ஆன்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

படம்: தி நியூ பேப்பர்

19 Mar 2019

சாலைப் பணிகளுக்கு புதிய விதிமுறைகள்

பயங்கரவாதத் தாக்குதலில் தப்பியவர்களையும் மாண்டோரின் குடும்பத்தாரையும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் சந்தித்து ஆறுதல் கூறினார். படம்: இபிஏ

17 Mar 2019

ஆஸ்திரேலியர் மீது கொலைக் குற்றச்சாட்டு