இந்திய கட்டுமான ஊழியர் மரணம்

செங்காங் கட்டுமானத் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் மீது பெரிய உலோகத் தகடு விழுந்தததில் அவர் மரணம் அடைந்தார். 

மரணம் அடைந்தவர் 36 வயது இந்திய நாட்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் மார்ச் 9ஆம் தேதி 327C ஆங்கர்வேல் சாலையில் உள்ள கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சு அறிக்கை வெளியிட்டது.

தூண்களை அமைக்கும் பணியில் அந்த ஊழியர் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சம்பவம் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.

அந்நாள் காலை 9 மணி அளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். 

மாண்ட ஊழியர் ‘ஹரிஸ்  கன்ஸ்ட்ரக்ஷன்’ எனும் நிறுவனத்துக்கு வேலை செய்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. சம்பவம் குறித்து அமைச்சு விசாரணை நடத்துகிறது. 

கடந்த மாதம் 27ஆம் தேதியன்று சாங்கி ஈஸ்ட்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் கனரக வாகனம் ஒன்று மோதி 27 வயது இந்திய ஊழியர் மரணம் அடைந்தார்.

அதுவே சாங்கி ஈஸ்ட் கட்டுமானத் திட்டத்தில் மரணத்தை ஏற்படுத்திய முதல் விபத்து என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது. சாங்கி ஈஸ்ட் கட்டுமானத்  திட்டத்தில் சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாவது முனையத்துக்கான கட்டுமானமும் அடங்கும். 

 

முழு விவரம்: அச்சுப்பிரதியில் அல்லது இ-பேப்பர்

இப்பகுதியில் மேலும் செய்திகள்