எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளாகி 157 பேரும் பலியாயினர்

படம்: ராய்ட்டர்ஸ்

அடிஸ்அபாபா நகரிலிருந்து நைரோபிக்குப் பறந்துகொண்டிருந்த எத்தியோப்பிய விமானம் நேற்றுக் காலையில் விபத்துக்குள்ளாகி விழுந்துவிட்டது என்று அந்த நாட்டின் பிரதமர் அகம்மது அறிவித்தார். 
அந்த விமானத்தில் 149 பயணிகளும் எட்டு விமான ஊழியர்களும் இருந்ததாகவும் பயணிகள் 33 நாடுகளைச் சேர்ந்த வர்கள் என்றும் யாரும் உயிர்பிழைக்க வில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. 
தலைநகர் அடிஸ்அபாபாவுக்கு 62 கி.மீ. தென்கிழக்கே இருக்கும் பிஃஷோது என்ற நகருக்கு அருகே அந்த போயிங் 737-800 மேக்ஸ் விமானம் விபத்துக்குள் ளாகிவிட்டது.
விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.44 மணிக்கு விபத்துக்குள்ளானது என்று தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத விமான நிறுவன பேச்சாளர் தெரிவித்தார். விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தாருக்கு எத்தியோப்பிய பிரதமர் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார். 
“விமானம் கென்யா நாட்டின் நைரோபி நகருக்குப் பறந்துகொண்டிருந்தது. எதிர் பாராதவிதமாக திடீரென்று அது விபத் துக்குள்ளாகிவிட்டது. அந்த விபத்து காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை பிரதமர் அலுவலகம்  தெரிவித்துக்கொள் கிறது,” என்று நேற்று அந்த அலுவலகம் டுவிட்டரில் குறிப்பிட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயங்கரவாதத் தாக்குதலில் தப்பியவர்களையும் மாண்டோரின் குடும்பத்தாரையும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் சந்தித்து ஆறுதல் கூறினார். படம்: இபிஏ

17 Mar 2019

ஆஸ்திரேலியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தாக்குதலில் காயமடைந்தோரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் அதிகாரிகள்.

16 Mar 2019

நியூசிலாந்து பிரதமர்: நாட்டின் கறுப்பு தினம்