கடல் எல்லை கோரிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகின்றன

சிங்கப்பூர்-மலேசியா இணக்கம் சிங்கப்பூரும் மலேசியாவும் துவாசுக்கு அருகே கடல் எல்லை தொடர்பான கோரிக்கை களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க கூட்டாக இணங்கி இருக்கின்றன. சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் மலேசிய வெளியுறவு அமைச்சர் சாய்ஃபுதின் அப்துல்லாவும் நேற்று சந்தித்துப் பேசினர். கடல் எல்லை கோரிக்கைகளை உடனடியாக நிறுத்தி வைப்பது என்று தாங்கள் இணங்கியதாக அந்த இருவரும் அறிவித்துள்ள னர். இந்த இணக்கத்தை அடுத்து, சிங்கப்பூரும் மலேசி யாவும் முறையே, டிசம்பர் 6 மற்றும் அக்டோபர் 25க்கு முன் இருந்த தங்களின் எல்லைக ளையே தங்களுடைய கடல் எல்லைகளாக இப்போதைக்குக் கருதும். துவாசுக்கு அருகே கடல் எல்லை தொடர்பான பிரச்சினை தொடங்கியது முதல் அந்தக் கடற்பகுதியில் கலன்கள் மோதிக்கொண்ட சம்பவமும் நிகழ்ந்து இருக்கிறது. இப் போது எல்லைக் கோரிக்கை களை இருதரப்புமே நிறுத்தி வைப்பது முக்கியமான ஒன்று என்று சிங்கப்பூரும் மலேசி யாவும் தெரிவித்துள்ளன.